சிதம்பரத்தில் 146 பள்ளி வாகனங்கள் சோதனை: சரியில்லாத 6 வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன
சிதம்பரம் ஆக்ஸ்போர்டு பள்ளி வளாகத்தில், சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் வட்டங்களில் உள்ள தனியார் பள்ளி வாகனங்களை (வேன், பஸ்) வட்டார போக்குவரத்துறை சார்பில் புதன்கிழமை ஆய்வு
சிதம்பரத்தில் தனியார் பள்ளி வாகனங்களை, வருவாய்த் துறையினர், காவல்துறையினர், மோட்டா வாகன ஆய்வாளர்கள் ஆகியோர் இணைந்து புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
சிதம்பரம் ஆக்ஸ்போர்டு பள்ளி வளாகத்தில், சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் வட்டங்களில் உள்ள தனியார் பள்ளி வாகனங்களை (வேன், பஸ்) வட்டார போக்குவரத்துறை சார்பில் புதன்கிழமை ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தணிக்கை செய்யப்பட்டது.
சிதம்பரம் உதவிஆட்சியர் எம்.அரவிந்த், டிஎஸ்பி ஆர்.ராஜாராம் ஆகியோர் முன்னிலையில் வட்டார போக்குவரத்து துறை மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கே.சத்தியக்குமார், கே.ராமச்சந்திரன் ஆகியோர் வாகனங்களை ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது உதவித் தொடக்கக்கல்வி அலுவலர்கள் கே.மோகன் (புவனகிரி), எஸ்.ஜெயக்குமார் ஜான்சன் (கீரப்பாளையம்), என்.குமார் (பரங்கிப்பேட்டை) ஆகியோர் உடனிருந்தனர்.
சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் வட்டங்களில் உள்ள மொத்தம் 205 பள்ளி வாகனங்களுக்கு, 146 வாகனங்கள் மட்டுமே ஆய்விற்கு வந்தன. இதில் 6 வாகனங்கள் உரிய வசதிகள் இல்லாததால், திருப்பி அனுப்பி வைக்கப்பட்டன. மேலும் ஆய்விற்கு வராத வாகனங்களும், உரிய வசதி மற்றும் ஆவணங்கள் இல்லாமல் திருப்பி அனுப்பி வைக்கப்பட்ட வாகனங்களும், உரிய வசதிகளை செய்து வருகிற மே 30-ம் தேதிக்குள் வட்டார போக்குவரத்துறை அலுவலகத்தில் காண்பித்து அனுமதி பெற வேண்டும் என மோட்டார் வாகன ஆய்வாளர் கே.சத்தியக்குமார் தெரிவித்தார்.