சிதம்பரத்தில் ஒரே நாளில் 5 பேர் தற்கொலை!
சிதம்பரம் நகரில் வெவ்வேறு பகுதியில் ஒரே நாளில் 5 பேர் தற்கொலை செய்து கொண்டனர். தாய், மகன், மகள் ஆகிய மூவர் பூச்சி மருந்து குடித்தும், ஒருவர் தூக்குப் போட்டும், ஒருவர் ரயில் முன் பாய்ந்தும் தற்கொலை செய்து கொண்டார்.
சிதம்பரம் நகரில் வெவ்வேறு பகுதியில் ஒரே நாளில் 5 பேர் தற்கொலை செய்து கொண்டனர். தாய், மகன், மகள் ஆகிய மூவர் பூச்சி மருந்து குடித்தும், ஒருவர் தூக்குப் போட்டும், ஒருவர் ரயில் முன் பாய்ந்தும் தற்கொலை செய்து கொண்டார்.
தாய், மகன், மகள் ஆகிய மூவர் தற்கொலை:
சிதம்பரம் அருகே கவரப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த குணசேகரன் மனைவி அண்ணப்பூரணி (44). சிதம்பரத்தில் வசித்து வந்த அண்ணப்பூரணி கணவர் குணசேகரன் 6 வருடம் முன்பு நோய்வாய்பட்டு இறந்த பின்னர் தனது மகன் கபிலன், மகள் பர்வதவர்தினி ஆகியோருடன் சொந்த ஊரான சிதம்பரம் அருகே உள்ள கவரப்பட்டு கிராமத்தில் வசித்து வந்தார். கூலி வேலை செய்து குழந்தைகளை படிக்க வைத்து குடும்பம் நடத்தி வந்தார். இந்நிலையில் உடல்நிலை சரியில்லா இருந்த அண்ணப்பூரணி தீவிர சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உடல்நிலை சரியில்லாததால் தனது குழந்தைகளை காப்பாற்ற முடியாது என்பதால், புதன்கிழமை இரவு அண்ணபூரணி குளிர்பானத்தில் வயலுக்கு அடிக்கப்படும் பூச்சி மருந்தை கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து விட்டு, தானு குடித்துவிட்டு படுத்துவிட்டார். காலை வீட்டின் கதவு திறக்கப்படாததால், சந்தேகப்பட்டு அருகாமையில் உள்ள கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது தாய், மகன்,மகள் மூவரும் வாயில் நுரை தள்ளியபடி இறந்து கிடந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த அண்ணாமலைநகர் போலீஸார் சென்று மூவரது உடலை கைப்பற்றி பிரேச பரிசோதனைக்கு சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
தூக்கு போட்டு இளைஞர் தற்கொலை:
சிதம்பரம் வஉசித்தெருவைச் சேர்ந்த தங்கவேலு மகன் ரமேஷ் (28). பஸ்நிலையத்தில் உள்ள தந்தைக்கு சொந்தமான பேக்கரியில், உதவியாக இருந்து பணியாற்றி வருகிறார். இந்நிலையில் செலவிற்கு பணம் கேட்டு கொடுக்காததால், ஆத்திரமடைந்த ரமேஷ் வீட்டில் ஃபேனில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நகர போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை:
சிதம்பரம் அருகே உள்ள கொத்தங்குடிதோப்பு பகுதியில் உள்ள ரயி்ல்வே பாதையில் வியாழக்கிழமை காலை 25 வயது இளைஞர் ஒருவர் தலை மற்றும் கால்கள் துண்டான நிலையில் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். தகவல் அறிந்த சிதம்பரம் ரயில்வே போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவரது சட்டை பையில் வாக்காளர் அடையாள அட்டை இருந்தது. அதில் அந்த இளைஞர் சிதம்பரம் அருகே உள்ள ஒரத்தூரைச் சேர்ந்த சிவராஜ் (25) என தெரியவந்தது. ஈரோடு நூல் கம்பெணியில் மேலாளராக பணியாற்றி வந்த இவர் குடும்ப பிரச்சனையால் தற்கொலை செய்து கொண்டார் என போலீஸார் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து ரயில்வே போலீஸார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.