முகப்பு
தற்போதைய செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூர் கல்வி மாவட்டத்தில் 36 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி

ஸ்ரீவில்லிபுத்தூர் கல்வி மாவட்டத்தில் உள்ள 89 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் மூலம் எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் 36 பள்ளிகளில் தேர்வு எழுதிய அனைத்து மாணவ மாணவியரும் தேர்ச்சி பெற்றனர்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:20 AM
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூர் கல்வி மாவட்டத்தில் உள்ள 89 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் மூலம் எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் 36 பள்ளிகளில் தேர்வு எழுதிய அனைத்து மாணவ மாணவியரும் தேர்ச்சி பெற்றனர்.

இது குறித்து மாவட்டக் கல்வி அலுவலர் அ.விஷ்ணுதாஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு உயர்நிலைப் பள்ளிகள்: பிள்ளையார்நத்தம், உள்ளூர்பட்டி, திருள்ளுவர்நகர், தொம்பக்குளம், பானாங்குளம்.

100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு உதவி பெறும் உயர்நிலைப் பள்ளிகள்: மம்சாபுரம் சிவாரம் மகளிர் உயர்நிலைப் பள்ளி, ராஜபாளையம் வணிக வைசியர் உயர்நிலைப் பள்ளி, ராஜபாளையம் ஏ.கே.டி.ஆர். ஆண்கள் உயர்நிலைப் பள்ளி, சங்கரபாண்டியபுரம் ஏ.ஏ.ஜி.எம். உயர்நிலைப் பள்ளி, ஆர்.ரெட்டியபட்டி ஜோதி உயர்நிலைப் பள்ளி.

100 சதவீதம் தேர்ச்சி பெற்ற முழு சுயநிதிப் பள்ளிகள்: மம்சாபுரம் பசும்பொன் தேவர் உயர்நிலைப் பள்ளி, கோவிலூர் சிவந்தி ஆதித்தனார் உயர்நிலைப் பள்ளி.

100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு மேல்நிலைப் பள்ளிகள்: எஸ்.அம்மாபட்டி, பாப்பையநாயக்கன்பட்டி, நல்லமநாயக்கன்பட்டி.

100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகள்: எஸ்.ராமச்சந்திராபுரம் கலைமகள் மேல்நிலைப் பள்ளி, ராஜபாளையம் அன்னப்பராஜா மேல்நிலைப் பள்ளி, ராஜபாளையம் பி.ஏ.சி.ஆர்.அ.அ. மகளிர் மேல்நிலைப் பள்ளி, தளவாய்புரம் டி.என்.பி.எம்.ஏ.என். மகளிர் மேல்நிலைப் பள்ளி, சோழபுரம் ஆர்.வி.தேவர் மகளிர் மேல்நிலைப் பள்ளி, மீனாட்சிபுரம் ஆர்.சி. மேல்நிலைப் பள்ளி.

100 சதவீதம் தேர்ச்சி பெற்ற மெட்ரிக்குலேஷன் பள்ளிகள்: ராஜபாளையம் நவபாரத் மெட்ரிக் பள்ளி, செட்டியார்பட்டி செயிண்ட ஆண்டனி மெட்ரிக் பள்ளி, தளவாய்புரம் பெருந்தலைவர் காமராஜ் மெட்ரிக் பள்ளி, ஸ்ரீவில்லிபுத்தூர் செயிண்ட் ஆண்டனி மெட்ரிக் பள்ளி, ஸ்ரீவில்லிபுத்தூர் வள்ளுவர் வித்யாலயா மெட்ரிக் பள்ளி, வத்திராயிருப்பு ரெங்காராவ் லயன்ஸ் மெட்ரிக் பள்ளி, ராஜபாளையம் சின்மயா வித்யாலயா மெட்ரிக் பள்ளி, ராஜபாளையம் மகரிஷி வித்யா மந்திர் மேல்நிலைப் பள்ளி, ராஜபாளையம் ஆனந்தா வித்யாலயா மெட்ரிக் பள்ளி, ராஜபாளையம் ஸ்ரீமதி லிங்கம்மாள் ரோட்டரி மெட்ரிக் பள்ளி, சங்கம்பட்டி ஹரிஸ் மெட்ரிக் பள்ளி, ராஜபாளையம் கேசாடிமிர் மெட்ரிக் பள்ளி, ஸ்ரீவில்லிபுத்தூர் லயன்ஸ் மெட்ரிக்குலேஷன் பள்ளி, கிருஷ்ணன்கோவில் வி.பி.எம்.எம். மெட்ரிக் பள்ளி.

முழு கட்டுரையைப் படிக்க →