சிதம்பரத்தில் தபால் தலை தட்டுப்பாடு: தட்டுப்பாடை நீக்க முத்திரை பதிக்க வேண்டுகோள்
தமிழகத்தில் உள்ள தலைமை தபால் நிலையங்கள் மற்றும் முக்கிய தபால் நிலையங்களில் பிராங்கிங் மெஷின் (Franking Machine) உள்ளது. அதன் மூலம் பொதுமக்களிள் தபால்களுக்கு ஒட்ட வேண்டிய தபால் தலைக்கு
சிதம்பரம் நகரம் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் தபால் தலை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தட்டுப்பாட்டை நீக்க, உரிய கட்டணத்தை பெற்று கவரில் முத்திரை பதிக்கலாம் என சமூகஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளது.
தமிழகத்தில் உள்ள தலைமை தபால் நிலையங்கள் மற்றும் முக்கிய தபால் நிலையங்களில் பிராங்கிங் மெஷின் (Franking Machine) உள்ளது. அதன் மூலம் பொதுமக்களிள் தபால்களுக்கு ஒட்ட வேண்டிய தபால் தலைக்கு உரிய பணத்தை பெற்று, அந்த கருவி மூலம் தபால் கவரில் முத்திரை பதிக்கலாம். இதனால் தபால் தலை ஒட்ட வேண்டிய அவசி.ம் இல்லை. தற்போது முற்றிலும் கணினி மயமாகிவிடச்ட நிலையில் ரிஜிஸ்டர் தபால், விரைவு தபால், பார்சல் போன்ற தபால்களும், வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் தபால்களும் அதற்குரிய பணத்தை பெற்று முத்திரை பதிக்கப்பட்டு வருகிறது. அதேபோன்று பதிவுத்தாபல்கள் அனுப்பும் போது அதற்குரிய பணத்தை பெற்று ரசீது வழங்கப்படுகிறது. இதனால் தபால்தலை தட்டுப்பாட்டை நீக்க முடியும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.