தற்போதைய செய்திகள்

சாலையோரம் பதுக்கிய 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

குமரி மாவட்ட பறக்கும்படை தாசில்தார் கண்ணன், வருவாய் ஆய்வாளர் செய்யதுஅலி, ஊழியர் ஜான்பிரைட் ஆகியோர் திங்கள்கிழமை கொல்லங்கோடு அருகேயுள்ள வள்ளவிளை ததேயுபுரம் பகுதியில் கண்காணிப்பு

சி. சுரேஷ்குமார்

கொல்லங்கோடு அருகே ஏ.வி.எம். கால்வாய் கரையோரம் சாலையோரம் பதுக்கிய ரேஷன் அரிசியை பறக்கும்படை தாசில்தார் தலைமையிலான அதிகாரிகள் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர்.

குமரி மாவட்ட பறக்கும்படை தாசில்தார் கண்ணன், வருவாய் ஆய்வாளர் செய்யதுஅலி, ஊழியர் ஜான்பிரைட் ஆகியோர் திங்கள்கிழமை கொல்லங்கோடு அருகேயுள்ள வள்ளவிளை ததேயுபுரம் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ததேயுபுரம் ஏ.வி.எம். கால்வாய் அருகே சாலையோரம் சாக்கு மூட்டைகள் தார்பாய் போட்டு மூடப்பட்டு அதன்மீது தேங்காய் தொண்டுகள் அடுக்கப்பட்டிருந்தது. சந்தேகத்தின் பேரில் அதிகாரிகள் அங்கு சென்று பார்த்த போது சாக்கு மூட்டைகளில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அங்கிருந்த 500 கிலோ ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியை காப்புக்காடு நுகர்பொருள் வாணிப கழக கிட்டங்கியில் ஒப்படைத்தனர். ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தவர்கள் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொகுதிப் பங்கீடு: திமுக - மனிதநேய மக்கள் கட்சி பேச்சுவார்த்தை தொடக்கம்

தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு

நேபாளம்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 17 பேர் பலி

நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழா கொடியேற்றம்

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு

SCROLL FOR NEXT