சேத்தியாத்தோப்பு கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகளுக்கு ரூ.18 கோடி பாக்கி
சேத்தியாத்தோப்பு கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய தொகை ரூ.18 கோடியை உடனடியாக வழங்க வேண்டும் என தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
சேத்தியாத்தோப்பு கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய தொகை ரூ.18 கோடியை உடனடியாக வழங்க வேண்டும் என தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள சேத்தியாத்தோப்பில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. தலைவர் எஸ்.பாபு தலைமை வகித்தார். செயலாளர் கே.ஆதிமூலம் வேலை அறிக்கையை படித்தார். மாநிலச் செயலாளர் எஸ்.காமராஜ், மாவட்டத் தலைவர் ஜி.மாதவன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். நிர்வாகிகள் கே.தேவராசன், என்.ஆர்.குமரேசன், சி.இளவரசன், என்.கோவிந்தராசு, எஸ்.சண்முகம், ராஜா மதிநிறைச்செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தீர்மானங்கள்:
சேத்தியாத்தோப்பு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் எத்தானால் உற்பத்திக்காக ரூ.3 கோடிக்கு மேல் விவசாயிகளிடம் பிடித்தம் செய்து, இதுவரை ஆலப்பிரிவு தொடங்கப்படவில்லை. எனவே ஜூன் 10-ம் தேதி சேத்தியாத்தோப்பு குறுக்கு ரோட்டில் சாலைமறியலில் ஈடுபடுவது; 2004 முதல் ஆலைக்கு கிடைத்த லாபம் ரூ.44 கோடியில், விலை லாபத்தில் ஆலை நிர்வாகம், விவசாயிகளுக்கு பங்கு தராமல் உள்ளது. எனவே கள்ளக்குறிச்சி சர்க்கரை ஆலை விவசாயிகள் போன்று நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து விலை லாபத்தை பெறுவது.