விருதுநகர் மாவட்டத்தில் ஆதார் அட்டைக்கு படம் எடுக்க நிரந்தர மையம் அமைப்பு
விருதுநகர் மாவட்டத்தில் ஆதார் அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணிகளை மேற்கொள்வதற்காக அந்தந்த பகுதிகளில் நிரந்தர மையம்
விருதுநகர் மாவட்டத்தில் ஆதார் அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணிகளை மேற்கொள்வதற்காக அந்தந்த பகுதிகளில் நிரந்தர மையம் அமைத்து செயல்படுவதாக ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஆதார் அடையாள அட்டை என்பது அனைத்து நலத்திட்ட உதவிகளும் பெறுவதற்கான முக்கியமான ஆவணம் ஆகும். இதைக் கருத்தில் கொண்டு அடையாள அட்டைகளுக்கு புகைப்படம் எடுப்பதற்காக விருதுநகர், சிவகாசி, அருப்புக்கோட்டை, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், திருத்தங்கல் ஆகிய 7 நகராட்சி அலுவலகங்களிலும், வட்டாட்சியர் அலுவலகங்களிலும் கடந்த 5-ம் தேதி முதல் நிரந்தர மையம் அமைத்து தொடர்ந்து செயல்பட இருக்கிறது.
அதனால், இதுவரையில் கைரேகை, கருவிழி மற்றும் புகைப்படம் எடுக்காதவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ஆட்சியர் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
Advertisement