தண்ணீர் கேட்டு மாநகராட்சி அலுவலகம் முற்றுகை
திருநெல்வேலி மாநகராட்சியின் மேலப்பாளையம் மண்டல அலுவலகத்தை தண்ணீர் கேட்டு பொதுமக்கள் புதன்கிழமை முற்றுகையிட்டதால்
திருநெல்வேலி மாநகராட்சியின் மேலப்பாளையம் மண்டல அலுவலகத்தை தண்ணீர் கேட்டு பொதுமக்கள் புதன்கிழமை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருநெல்வேலி மாநகராட்சியின் மேலப்பாளையம் மண்டலத்தில் உள்ள 36ஆவது வார்டில் 150-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப் பகுதி மக்களுக்கு கடந்த சில நாள்களாக தண்ணீர் வரவில்லை. இதுதொடர்பாக, மாநகராட்சியின் மண்டல அலுவலகத்திலும், பிரதான அலுவலகத்திலும் புகார் தெரிவித்தும் நடவடிக்கை
எடுக்கவில்லையாம். புதன்கிழமையும் இந்த பகுதிக்கு தண்ணீர் வராததால் ஆத்திரமடைந்த பொதும்ககள் தண்ணீர் குடங்களுடன் மேலப்பாளையம் மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எஸ்டிபிஐ கட்சியின் தொகுதி செயலர் ரம்ஜான் தலைமையில், காலி குடங்களுடன் ஊர்வலமாக வந்த பெண்கள் மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் அமர்ந்து தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த மாநகராட்சி அதிகாரிகள், பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். உடனடியாக தண்ணீர் திறந்துவிட
நடவடிக்கை எடுப்பதாகவும், என்ன காரணத்துக்காக விநியோகித்தில் தடை ஏற்பட்டதை அறிந்து அவற்றை வருங்காலங்களில் நிகழாமல் சரிசெய்வதாகவும் உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.