முகப்பு
தற்போதைய செய்திகள்

விருதுநகரில் பெண் காவலர் தற்கொலை முயற்சி

விருதுநகர் அருகே குடும்பத்தகராறு காரணமாக பெண் காவலர்  ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை

Updated On : 12 நவம்பர், 2014 at 8:02 PM
பகிர்:
Updated On : 5 ஜனவரி, 2024 at 12:51 PM

விருதுநகர் அருகே குடும்பத்தகராறு காரணமாக பெண் காவலர்  ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    விருதுநகர் சூலக்கரை காவல் நிலையத்தில் பெண் காவலராக பணியாற்றி வருபவர் சரளாதேவி(30). இவரது கணவர் ராஜவேல் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். தற்போது, ஆயுதப்படை வளாக குடியிருப்பில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், செவ்வாய்கிழமை இரவு குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த சரளாதேவி விஷம் அருந்தி மயங்கி விழுந்து கிடந்தாராம். இதை அக்கம் பக்த்தில் உள்ளவர்கள் பார்த்து உயிருக்கு ஆபத்தான நிலையில் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது தொடர்பாக சூலக்கரை காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.