முகப்பு
தற்போதைய செய்திகள்

விருதுநகர் மாவட்ட காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம் :ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பங்கேற்பு

விருதுநகர் மாவட்ட காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டத்தில் வருகிற 26-ம் தேதி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பங்கேற்கிறார்.

Updated On : 20 நவம்பர், 2014 at 8:54 PM
பகிர்:
Updated On : 5 ஜனவரி, 2024 at 12:55 PM

விருதுநகர் மாவட்ட காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டத்தில் வருகிற 26-ம் தேதி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பங்கேற்கிறார்.

விருதுநகர் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் அக்கட்சி அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு விருதுநகர் முன்னாள் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தலைமை வகித்தார். மாவட்ட காங்கிரஸ் தலைவர் வேலாயுதம், பாண்டியன் கிராம வங்கியின் முன்னாள் தலைவர் பாலகிருஷ்ணசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட வர்த்தக காங்கிரஸ் முன்னாள் தலைவரும், தற்போதைய நகராட்சி உறுப்பினருமான பாஸ்கரன் வரவேற்புரை வழங்கினார்.

இக்கூட்டத்தில் முன்னாள் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் பங்கேற்று பேசுகையில், விருதுநகரில் வருகிற 26-ம் தேதி என்.எஸ்.கே அரங்கத்தில் மாவட்ட காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பங்கேற்க இருக்கிறார். அதனால், இம்மாவட்டத்தில் நகர வட்டார, கிராம கமிட்டி மற்றும் துணை அமைப்பு நிர்வாகிகள் அனைவரும் திரளாக வந்து வரவேற்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

Advertisement

மேலும், இக்கூட்டத்தில் நகர காங்கிரஸ் தலைவர் கார்த்திகேயன், மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் காளிராஜன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் முன்னாள் கண்காணிப்பு குழு உறுப்பினர் சுப்புக்காளை, விருதுநகர் நகராட்சி உறுப்பினர்கள் நாகேந்திரன், பேபிகாளிராஜன், இளைஞர் காங்கிரஸ் முன்னாள் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.