கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏவின் மகன்கள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை!
காங்கிரஸ் எம்எல்ஏவின் மகன்கள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை பற்றி..
கிரிப்டோகரன்சி தொடர்பான பணமோசடி வழக்கில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ என்.ஏ. ஹரிஸின் இரண்டு மகன்கள் மற்றும் சிலரின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் விதிகளின் கீழ், நகரில் உள்ள சுமார் 12-க்கும் மேற்பட்ட வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தினர்.
இதில் எம்எல்ஏவின் மகன்களான முகமது ஹாரிஸ் நலபத் மற்றும் உடர் ஃபாரூக் நலபத் மற்றும் ஸ்ரீகிருஷ்ண ரமேஷ் என்ற ஸ்ரீகி கிரிப்டோ ஹேக்கர் ஆகியோரின் வீடுகளும் அடங்கும்.
Advertisement
Advertisement
என். ஏ. ஹாரிஸ், பெங்களூருவின் சாந்திநகர் சட்டப்பேரவைத் தொகுதியின் காங்கிரஸ் உறுப்பினர் ஆவார்.
தேசிய மற்றும் சர்வதேச இணையதளங்களை ஹேக் செய்து, பிட்காயின்களைத் திருடியதாகக் கூறப்படும் ஹேக்கர் ஸ்ரீகி மற்றும் அவரது கூட்டாளிகள் தொடர்பான 2017 ஆம் ஆண்டு வழக்கில் கர்நாடக காவல்துறை பதிவு செய்த சில முதல் தகவல் அறிக்கைகள் மற்றும் குற்றப்பத்திரிகைகளிலிருந்து இந்த பணமோசடி வழக்கு உருவாகியுள்ளது.
The Enforcement Directorate on Monday raided the premises of the two sons of Karnataka Congress MLA N A Haris and some others in a crypto currency-linked money laundering case, officials said.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.