முகப்பு
தற்போதைய செய்திகள்

வருமானவரித் துறை அதிகாரிகள் தன்னை சிறை பிடித்துள்ளனர்: செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

சோதனை என்ற பெயரில் வருமானவரித் துறை அதிகாரிகள் தன்னை சிறை பிடித்துள்ளதாக செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு குறித்து...

Updated On : 20 ஏப்ரல் 2026, 11:55 am IST
செல்வப்பெருந்தகை - எக்ஸ்
பகிர்:

சோதனை என்ற பெயரில் வருமான வரித்துறை அதிகாரிகள் தன்னை சிறை பிடித்துள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகையின் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள வீடு, மற்றும் மணிமங்கலத்தில் உள்ள வீட்டில் திங்கள் காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கீழ்ப்பாக்கம் வீட்டில் சோதனையிட்டு வந்த வருமானவரித் துறை அதிகாரிகள் தற்போது திரும்பிச் சென்றுள்ளனர்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், சோதனை என்ற பெயரில் இந்தி பேசும் அதிகாரிகளுடன் சேர்ந்து வருமானவரித் துறை அதிகாரிகள் என்னை எங்கேயும் போகவிடமால் சிறை பிடித்துள்ளனர்.

அரசியல் கடமை, மக்கள் சந்திப்பை தடுக்கும் வகையில் சோதனை. அரசியல் உள்நோக்கம் கொண்ட இந்தச் செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

ராகுல் காந்தி இன்று (திங்கள்கிழமை) பிரசாத்திற்கு தமிழகம் வரும் நிலையில், ராகுல் காந்தியுடன் பிரசாரம் செய்ய செல்வதை தடுக்க முயற்சிப்பதுடன் சோதனை மூலம் அச்சுறுத்த நினைக்கின்றனர் என குற்றச்சாட்டிய செல்வப்பெருந்தகை, என்னை முடக்குவது எந்தவிதத்தில் நியாயம்... எங்களை கட்டிப்போட முடியாது என அவர் கூறினார்.

summary

Income Tax Department Officials Have Detained Me: Selvaprerunthagai Alleges

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments