FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலைவாய்ப்பு

வருமானவரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் வேலை வேண்டுமா? -உடனே விண்ணப்பிக்கவும்!

வருமானவரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் காலிப்பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு குறித்து...

Updated On : 1 ஆகஸ்ட் 2026, 1:11 pm IST
வருமானவரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் வேலை - ITAT
பகிர்:

வருமான வரி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தின் பல்வேறு பிரிவுகளில், 22 'முதுநிலை தனி செயலாளர்' மற்றும் 20 'தனி செயலாளர்' என 42 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு இந்திய அரசியலமைப்புச் சட்டம் அல்லது குடியுரிமை உரிமைகளை ஒழுங்குபடுத்தும் நாடாளுமன்றச் சட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்ட இந்தியக் குடிமக்களிடமிருந்து இணையவழி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து பார்ப்போம்...

வேலைவாய்ப்பு அறிவிப்பு எண். F.301-Ad(ATD)/DR/2026-27

Advertisement

Advertisement

பதவி: முதுநிலை தனி செயலர்(Senior Private Secretary)

காலியிடங்கள்: 22

சம்பளம்: மாதம் ரூ.47,600 - ரூ.1,51,100

பதவி: தனி செயலர்(Private Secretary)

காலியிடங்கள்: 20

சம்பளம்: மாதம் ரூ.44,900 - ரூ.1,42,400

தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன், சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 120 வார்த்தைகள் எழுதும் திறன் மற்றும் கணினியில் பணிபுரிவது குறித்த செயல்முறை அறிவு; மைக்ரோசாஃப்ட் ஆபீஸ், எக்செல் அல்லது பேஜ்-மேக்கர்ஸ் போன்ற மென்பொருள்களை இயக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 16.8.2026 தேதியின்படி 18 முதல் 35-க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். எழுத்துத் தேர்வு இரண்டு தாள்களைக் கொண்டது. எழுத்துத் தேர்வு 200 மதிப்பெண்கள், திறன் தேர்வு 100 மதிப்பெண்கள், நேர்முகத் தேர்வு 75 மதிப்பெண்கள் என மொத்தம் 375 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். தேர்வுக்கான வினாக்கள் ஆங்கிலத்தில் அமைந்திருக்கும்.

தேர்வு மையங்கள்: தமிழ்நாட்டில் சென்னையில் நடைபெற்றுகிறது.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் itat.gov.in/recruitments என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிப்போர் கட்டணம் எதுவும் செலுத்த வேண்டாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசிநாள்: 16.8.2026

விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

summary

Income Tax Appellate Tribunal Recruitment of 42 Sr. Private Secretaries and Private Secretaries-2026 Online applications are invited from Indian Nationals for filling up existing as well as anticipated vacancies

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments