முகப்பு
தற்போதைய செய்திகள்

ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.82 லட்சம்

பிரசித்தி பெற்ற இக் கோயிலில் மாதம்தோறும் உண்டியல் காணிக்கை எண்ணப்படுகிறது. அதன்படி, நவம்பர் மாதத்துக்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி வியாழக்கிழமை (நவம்பர் 20)

Updated On : 5 ஜனவரி, 2024 at 7:25 AM
பகிர்:

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலுக்கு பக்தர்கள் ரூ.82 லட்சம் ரொக்கம், 160 கிராம் தங்கம், 530 கிராம் வெள்ளியை காணிக்கையாக செலுத்தி உள்ளனர்.

பிரசித்தி பெற்ற இக் கோயிலில் மாதம்தோறும் உண்டியல் காணிக்கை எண்ணப்படுகிறது. அதன்படி, நவம்பர் மாதத்துக்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி வியாழக்கிழமை (நவம்பர் 20) நடைபெற்றது.கோயில் இணை ஆணையர் இரா.செந்தில்வேலவன் தலைமையில், இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர்கள் வேதா, பிரகாஷ் ஆகியோர் மேற்பார்வையில் நூற்றுக்கும் மேற்பட்ட கோயில் ஊழியர்கள், பக்தர்கள் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

ரூ.82 லட்சம் ரொக்கம்:

கோயில் வளாகத்தில் உள்ள நிரந்தர உண்டியல்கள், கிரிவலப் பாதையில் அஷ்டலிங்க சன்னதிகளில் உள்ள உண்டியல்கள், அடிஅண்ணாமலை ஆதிஅருணாசலேஸ்வரர் கோயில், திருவண்ணாமலை ஸ்ரீதுர்க்கையம்மன் கோயில்களில் இருந்த அனைத்து உண்டியல்களும் வியாழக்கிழமை காலை முதல் மாலை வரை எண்ணப்பட்டன.இதில், ரூ.82 லட்சத்து 36 ஆயிரத்து 985 ரொக்கம், 160 கிராம் தங்கம், 530 கிராம் வெள்ளியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தது தெரியவந்தது. ரொக்கப் பணம் கோயிலின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் கோயில் பொக்கிஷ அறையில் பாதுகாகப்பாக வைக்கப்பட்டுள்ளதாக கோயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.