தற்போதைய செய்திகள்

மதுரையில் உலகக் கோப்பை கபடி சாம்பியன்ஷிப் போட்டி: ஏற்பாடுகள் தீவிரம்

மதுரையில் வரும் பிப்ரவரி மாதம் உலகக் கோப்பை கபடி சாம்பியன்ஷிப் போட்டி நடக்கிறது. இதுகுறித்து  மதுரையில் தமிழ்நாடு அமச்சூர் கபடிக்கழக மாநிலத் தலைவர் சோலை எம். ராஜா பொதுச்செயலர், ஏ. சமியுல்லா ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளதாவது:-

ஜெயப்பாண்டி

மதுரையில் வரும் பிப்ரவரி மாதம் உலகக் கோப்பை கபடி சாம்பியன்ஷிப் போட்டி நடக்கிறது. இதுகுறித்து  மதுரையில் தமிழ்நாடு அமச்சூர் கபடிக்கழக மாநிலத் தலைவர் சோலை எம். ராஜா பொதுச்செயலர், ஏ. சமியுல்லா ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளதாவது:-

தமிழ்நாடு அமச்சூர் கபடி கழகமும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும், இணைந்து உலகிலேயே முதன் முறையாக 20 நாடுகள் பங்கேற்கும் ஆண்கள் மற்றும்  பெண்கள் கபடி அணிகளுக்கான அம்மா உலகக்கோப்பை கபடி சாம்பியன்ஷிப் போட்டி மதுரை தமுக்கம் மைதானத்தில் நடத்த உள்ளன. வரும் பிப்ரவரி 24ம் தேதி முதல் மார்ச் 1ம் தேதி முடிய இப்போட்டிகள் நடக்க உள்ளன. போட்டியை மாநில கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ தொடங்கி வைக்கிறார். இப்போட்டியை காண பார்வையாளர்கள் 10 ஆயிரம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கபடுகிறது.

பகல் இரவு ஆட்டங்களாக நடக்கும் இப்போட்டியை  மின்னொளியில் கண்டுகளிக்கும் வகையில் பார்வையாளர்க்ளுகாக தற்காலிகள் மேற்கூரை மைதானம் அமைக்கப்பட்டுள்ளது .இப்போட்டியில் நடப்பு சாம்பியன் இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் , மேற்கிந்திய தீவுகள், ஈரான், துனிகிஸ்த்தான் நேபாளம், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், தென் கொரியா, தாயலாந்து, வியட்நாம், மலேசியா, சீன, தைபே, மெக்ஸிகோ, இத்தாலி, கனடா, ஆகிய நாடுளை சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினர் பங்கேற்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.

போட்டியில் பங்கேற்கும்  வீரர்கள் தங்குவதற்கான வசதிகளும் ஏற்பாடுகளும், செய்யப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். மதுரையில்  கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அகில இந்திய அளவில் கபடி போட்டி நடைபெற்ற நிலையில் தற்போது சர்வதேச அளவில் கபடி போட்டி நடக்க உள்ளது. இது விளையாட்டு ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

ஏழுமலையான் தரிசனம்: 16 மணிநேரம் காத்திருப்பு!

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

SCROLL FOR NEXT