கேந்திர வித்யா பள்ளிகளில் சமஸ்கிருதத்தைத் திணிக்கக் கூடாது: சிதம்பரம் தமிழ்க் காப்பணி கோரிக்கை!
1956 நவம்பர் 1-ல் மொழிவழி மாநிலமாக தமிழ்நாடு உருவானதை நினைவுக் கூர்ந்து ஆண்டுதோறும் சிதம்பரம் தமிழ்க் காப்பணி அமைப்பு தமிழகப் பெருவிழாவை கொண்டாடி வருகிறது. அதன்படி இந்த
கேந்திர வித்யா பள்ளிகளில் மத்தியஅரசு ஜெர்மன் மொழி நீக்கம் என்ற பெயரால் சம்ஸ்கிருத மொழியை திணிக்கக்கூடாது என தமிழ் காப்பணி அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
1956 நவம்பர் 1-ல் மொழிவழி மாநிலமாக தமிழ்நாடு உருவானதை நினைவுக் கூர்ந்து ஆண்டுதோறும் சிதம்பரம் தமிழ்க் காப்பணி அமைப்பு தமிழகப் பெருவிழாவை கொண்டாடி வருகிறது. அதன்படி இந்த ஆண்டும் தமிழ்க்காப்பணி சார்பில் தமிழகப் பெருவிழா சிதம்பரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைப்பெற்றது.
ஆறுமுக நாவலர் அரங்கத்தில் நடைபெற்ற இவ்விழாவிற்கு தமிழ்க் காப்பணி தலைவர் அழ.பழநியப்பன் தலைமைத் வகித்து நிகழ்ச்சியினை தொடக்கி வைத்தார். துணைத் தலைவர் இராம. ஆதிமூலம், ஜோதிமணி பழநி ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைச் செயலாளர் கு.சிவப்பிரகாசம் வரவேற்றுப் பேசினார்.
தமிழர் தற்காப்புப் பயிற்சிப் பள்ளி மாணவர்கள் சிலம்பாட்டம் காண்போர் மனதை கவரும் வகையில் அமைந்தன. மாணவர்களுக்கு பயிற்சியளித்த, தமிழர் தற்காப்புப் பயிற்சிப் பள்ளி ஆசிரியர் இரா. எல்லாளன் அவர்களுக்கு, ஆசிரியர் மு.முருகவேள் சால்வை அணிவித்து கவுரவித்தார். தமிழ்க் காப்பணி சார்பில் சிதம்பரம் வட்ட பள்ளி மாணவர்களுக்கிடையே நவ.16-ம் தேதி நடத்திய பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசளித்து, தமிழ்க் காப்பணி பொதுச் செயலாளர் பா.பழநி வாழ்த்துரையாற்றினார். பொறியாளர் க.அருணபாரதி, ஒளிப்படங்களுடன் சிறப்புரையாற்றினார். மு.சம்பந்தம் நன்றி கூறினார்.
தீர்மானங்கள்: கேந்திர வித்யா பள்ளிகளில் ஜெர்மன் மொழி நீக்கம் என்ற பெயரால் மத்தியஅரசு, சமஸ்கிருதத்தைத் திணிக்கக் கூடாது, மொழிப் போர் வரலாற்றை தமிழகப் பாட புத்தகங்களில் பாடமாக சேர்க்க வேண்டும், தில்லை நடராசர் கோயிலை தமிழக அரசே ஏற்று நடத்த தனிச் சட்டம் பிறப்பிக்க வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.