முகப்பு
தற்போதைய செய்திகள்

நெல்லையில் கொலையுண்ட தொழிலாளி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

பாளையங்கோட்டை அருகே மேலப்பாட்டத்தை சேர்ந்தவர் முருகையா மகன் ஆறுமுகநயினார் (27) கொலை செய்யப்பட்டார். பஞ்சர் ஒட்டும் தொழிலாளியான இவர் பழிக்குப்பழியாக கொலை

Updated On : 5 ஜனவரி, 2024 at 7:30 AM
பகிர்:

பாளையங்கோட்டையில் இன்று கொலை செய்யப்பட்ட தொழிலாளி உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பாளையங்கோட்டை அருகே மேலப்பாட்டத்தை சேர்ந்தவர் முருகையா மகன் ஆறுமுகநயினார் (27) கொலை செய்யப்பட்டார். பஞ்சர் ஒட்டும் தொழிலாளியான இவர் பழிக்குப்பழியாக கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இக்கொலையில் தொடர்புடைய அப்பகுதியை சேர்ந்த சுரேஷ், தேவேந்திரன், பொன்முத்துராஜா ஆகியோர் திங்கள்கிழமை ஒட்டன்சத்திரம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

இதனிடையே செவ்வாய்க்கிழமை பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் திரண்ட அவரது உறவினர்கள், இக்கொலையில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். கொலை செய்யப்பட்ட ஆறுமுகநயினார் குடும்பத்திற்கு ரூ. 6 லட்சம் நிவாரண உதவித் தொகை, குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணி வழங்க வேண்டும் என தெரிவித்து அவரது உடலை வாங்க மறுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அவர்களிடம் ஏ.டி.எஸ்.பி. சுதர்சன், மாநகர கூடுதல் துணை ஆணையர் குமாரசாமி, பாளையங்கோட்டை வட்டாட்சியர் இந்திராகாந்தி, பசும்பொன் தேசிய கழக மாநிலத் தலைவர் ஜோதிமுத்துராமலிங்கம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.இதையடுத்து ஆறுமுகநயினார் உடலை உறவினர்கள் பெற்றுக் கொண்டனர். இதனை அடுத்து மேலப்பாட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆறுமுகநயினார் இறுதி சடங்கு நடைபெற்றது.

திருநெல்வேலி எஸ்.பி. கே.எஸ். நரேந்திரன்நாயர் அங்கு முகாமிட்டு பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்தினார். மேலப்பாட்டம் பகுதியில் தொடர்ந்து துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →