முகப்பு
தற்போதைய செய்திகள்

பேரூராட்சி பெண் துணைத் தலைவியை தாக்கியதாக செயல் அலுவலர் மீது வழக்கு

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பேரூராட்சி பெண் துணைத் தலைவியைத் தாக்கி, அவமானப்படுத்தியதாக செயல் அலுவலர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட

தற்போதைய செய்திகள்

பேரூராட்சி பெண் துணைத் தலைவியை தாக்கியதாக செயல் அலுவலர் மீது வழக்கு

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பேரூராட்சி பெண் துணைத் தலைவியைத் தாக்கி, அவமானப்படுத்தியதாக செயல் அலுவலர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட

Updated On : 5 ஜனவரி, 2024 at 3:57 AM
பகிர்:

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பேரூராட்சி பெண் துணைத் தலைவியைத் தாக்கி, அவமானப்படுத்தியதாக செயல் அலுவலர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் போலீஸார் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, எஸ்.கொடிக்குளம் பேரூராட்சி செயல் அலுவலராக இருப்பவர் ம.சேகர் (34). செவ்வாய்கிழமை பேரூராட்சி கூட்டம் நடைபெற்றுள்ளது. அப்போது பேரூராட்சி அலுவலகம் வந்த அ.தி.மு.க.வைச் சேர்ந்த துணைத் தலைவர் பா.முத்துலட்சுமி (37), செயல் அலுவலரிடம் கூட்டம் எத்தனை மணிக்கு என்று கேட்டுள்ளார். மேலும் கட்சி சார்பில் மாவட்ட அளவில் உண்ணாவிரதம் நடைபெறுகிறது. கூட்டம் நடத்த இவ்வளவு அவசரம் தேவையில்லை என்று கூறி வாக்குவாதம் செய்துள்ளார். இதில் ஆத்திரமுற்ற செயல் அலுவலர் சேகர், அலுவலக கிளார்க் சீனிவாசன், தற்காலிக பணியாளர்கள் ரா.கார்த்திகேயன், பா.முகுந்தன் ஆகியோர் சேர்ந்து துணைத் தலைவர் முத்துலட்சுமியை ஆபாசமாகப் பேசி, சட்டையைப் பிடித்து இழுத்து, கீழே தள்ளி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனை தட்டிக் கேட்ட அவரது கணவர் பாண்டி (41) யையும் சேகர் தாக்கியுள்ளார். இதில் காயமுற்ற இருவரும் விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து கூமாப்பட்டி காவல் நிலையத்தில் துணைத் தலைவர் முத்துலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் செயல் அலுவலர் ம.சேகர், சீனிவாசன், கார்த்திகேயன், முகுந்தன் ஆகியோர் மீது பெண்கள் வன் கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மேலும்  இதற்கு தூண்டுதலாக இருந்ததாக பேரூராட்சி தலைவர் சுப்புலட்சுமி இவரது கணவர் சேதுராமன் ஆகியோர் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். 

முழு கட்டுரையைப் படிக்க →