முகப்பு
தற்போதைய செய்திகள்

வேன்-கார் மோதல்: இருவர் சாவு; ஐ.ஏ.எஸ். அதிகாரி மனைவி காயத்துடன் உயிர் தப்பினார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே புதன்கிழமை மதுரை-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் வேனும் காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் காரில் பயணம் செய்த ஐ.ஏ.எஸ். அதிகாரியின்

தற்போதைய செய்திகள்

வேன்-கார் மோதல்: இருவர் சாவு; ஐ.ஏ.எஸ். அதிகாரி மனைவி காயத்துடன் உயிர் தப்பினார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே புதன்கிழமை மதுரை-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் வேனும் காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் காரில் பயணம் செய்த ஐ.ஏ.எஸ். அதிகாரியின்

Updated On : 5 ஜனவரி, 2024 at 3:57 AM
பகிர்:

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே புதன்கிழமை மதுரை-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் வேனும் காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் காரில் பயணம் செய்த ஐ.ஏ.எஸ். அதிகாரியின் உறவினர் உயிரிழந்தார். அவரது மனைவி உள்ளிட்டோர் காயங்களுடன் உயிர் தப்பினர். வேனை ஓட்டி வந்த டிரைவரும் உயிரிழந்தார்.

தமிழக அரசின் மருத்துவத் துறை இயக்குநராக பணிபுரிந்து தற்போது மத்திய அரசுப் பணியில் புதுதில்லியில் பணிபுரிந்து வருபவர் வி.கே.சுப்புராஜ்.

இவரது மனைவி உமாராணி (49) மற்றும் குடும்பத்தார் சென்னை, வேளாச்சேரி, வரதராஜபுரத்தில் குடியிருந்து வருகிறார்கள்.

ராஜபாளையத்தில் உள்ள உறவினர்கள் வீட்டிற்கு உமாராணி வந்துள்ளார். இவருடன் வீட்டில் பணிபுரியும், கடலூர் மாவட்டம், சிதம்பரம், மாரியம்மன்கோயில் கீழ வீதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகள் சந்தியா (20) வும் வந்துள்ளார்.

புதன்கிழமை அதிகாலை காரில் சென்னைக்கு புறப்பட்டுள்ளனர். காரில் உமாராணி, வீட்டின் பணிப் பெண் சந்தியா, உமாராணியின் அக்காள் அழகர்சாமி மனைவி விஜயலட்சுமி (62), இவர்களின் உறவினர் சென்னையைச் சேர்ந்த ரவீந்திரன் என்பவரின் இரண்டரை வயது மகன் விவான் ஆகியோர் சென்றுள்ளனர். காரை ஓட்டுநர் தங்கம் என்பவர் ஓட்டியுள்ளார்.

கார் கொல்லம்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கிருஷ்ணன்கோவிலை அடுத்து சென்று கொண்டிருந்தபோது, எதிரே ஸ்ரீவில்லிபுத்தூருக்கு தினசரி நாளிதழை ஏற்றி வந்த மினி வேனுடன் கார் மோதியுள்ளது. இதில் மோதிய வேகத்தில் கார் சாலை ஓரம் பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் வந்த விஜயலட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மினி வேனை ஓட்டி வந்த மதுரை, சம்மட்டிபுரம், வி.கண்ணன் (20) என்பவர் ஈடுபாடுகளில் சிக்கி உயிருக்கு போராட்டிக் கொண்டிருந்தார். சற்று நேரத்தில் அவரும் உயிரிழந்தார்.

மேலும் காரில் வந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி வி.கே.சுப்புராஜ் மனைவி உமாராணி எலும்பு முறிவு ஏற்பட்டு ராஜபாளையம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பணிப் பெண் சந்தியா, குழந்தை விவான் ஆகியோர் சிறு காயங்களுடன் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பாக நத்தம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

முழு கட்டுரையைப் படிக்க →