முகப்பு
தற்போதைய செய்திகள்

ஞாயிற்றுக்கிழமை பொள்ளாச்சி மகாலிங்கம் இறுதிச் சடங்கு

சென்னையில் இன்று காலமான தொழிலதிபர் பொள்ளாச்சி நா.மகாலிங்கத்தின் இறுதிச் சடங்கு வரும் ஞாயிற்றுக் கிழமை நடைபெறும் என்று குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:55 AM
பகிர்:

சென்னையில் இன்று காலமான தொழிலதிபர் பொள்ளாச்சி நா.மகாலிங்கத்தின் இறுதிச் சடங்கு வரும் ஞாயிற்றுக் கிழமை நடைபெறும் என்று குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.

சென்னை மயிலாப்பூரில் நடைபெற்ற வள்ளலார் குறித்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது, திடீரென மயங்கி விழுந்த அவர் பின்னர் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார். அங்கே அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மறைந்த பொள்ளாச்சி நா. மகாலிங்கத்தின் உடல் இன்று இரவே பொள்ளாச்சிக்குக் கொண்டு செல்லப்படுகிறது. இவரது இறுதிச் சடங்கு, அவரது பெற்றோர் சமாதி அமைந்துள்ள அவரது இல்லத்தின் அருகில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது இறுதிச் சடங்கில் சுமார் 5 லட்சம் பேர் வரை பங்கேற்பர் என்று கூறப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →