ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டும் என கோரி ஆரணியில் அதிமுக சார்பில் 1008 பால் குட ஊர்வலம்
ஜெயலலிதா விடுதலை ஆகி மீண்டும் முதல்வராக வேண்டும் என கோரி ஆரணியில் வெள்ளிக்கிழமை அதிமுக சார்பில் பெண்கள் 1008 பால் குட ஊர்வலம்
Updated On : 5 ஜனவரி, 2024 at 12:25 PM
ஜெயலலிதா விடுதலை ஆகி மீண்டும் முதல்வராக வேண்டும் என கோரி ஆரணியில் வெள்ளிக்கிழமை அதிமுக சார்பில் பெண்கள் 1008 பால் குட ஊர்வலம் நடைபெற்றது.
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா சொத்துகுவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில் ஜெயலலிதா விடுதலையாகி மீண்டும் முதல்வராக வேண்டும் என வேண்டி ஆரணி அதிமுக மகளிரணியினர் சார்பில் 1008 பால் குட ஊர்வலம் சென்றனர். ஆரணி பழைய பஸ்நிலையம் அரியாத்தம்மன் கோயில் அருகிலிருந்து பால்குட ஊர்வலம் துவங்கி மார்க்கெட் ரோடு, பஜார் வழியாக கொசப்பாளையம் மாரியம்மன் கோயில் வரை சென்று அம்மனுக்கு பாலபிஷேகம் செய்தனர்.இதில் மகளிரணியைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.