அம்பை அருகே பிடிபட்ட குரங்குகள்
அம்பாசமுத்திரம் அருகே ஜமீன்சிங்கம்பட்டி, அயன்சிங்கம்பட்டி பகுதியி்ல குரங்குகள் வீடுகளுக்குள் புகுந்து உணவுப் பொருட்கள், டிவி போன்ற பொருட்களை சேதப்படுத்தி வந்தன. விரட்டும் பெண்கள், சிறுவர்களை
அம்பாசமுத்திரம் அருகே சிங்கம்பட்டியில் அட்டகாசம் செய்த குரங்களை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்து காட்டில் கொண்டு விட்டனர்.
அம்பாசமுத்திரம் அருகே ஜமீன்சிங்கம்பட்டி, அயன்சிங்கம்பட்டி பகுதியி்ல குரங்குகள் வீடுகளுக்குள் புகுந்து உணவுப் பொருட்கள், டிவி போன்ற பொருட்களை சேதப்படுத்தி வந்தன. விரட்டும் பெண்கள், சிறுவர்களை குரங்குகள் விரட்டுவதாகவும், அப்பகுதியில் விளை நிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்து வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து அம்பாசமுத்திரம் வனச்சரகர் பாலேந்திரன் தலைமையில் வனவர் முருகசாமி மற்றும் வனப்பணியாளர்கள் ஜமீன்சிங்கம்பட்டியி்ல் குரங்குகளை பிடிக்க கூண்டுகள் வைத்தனர். அவ்வாறு பிடிபட்ட 15 குரங்குகளை வனத்துறையினர் மணிமுத்தாறு மலையில் கோயில்தட்டை என்ற இடத்தில் கொண்டு விட்டனர்.