நெல்லையில் அதிமுக மனித சங்கிலிப் போராட்டம்: எம்.பி., எம்.எல்.ஏ. க்கள் பங்கேற்பு
அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதாவை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி திருநெல்வேலி நகரம் ரதவீதிகளில் அதிமுகவின் இளைஞர் பாசறை சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் எம்.பி, எம்.எல்.ஏ க்கள் பங்கேற்றனர்.

சொத்துக் குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதாவுக்கு தண்டனை வழங்கியதற்கு ஆட்சேபம் தெரிவித்தும், அவரை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி அதிமுகவினர் தொடர்ந்து பல்வேறுப் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
செவ்வாய்க்கிழமை திருநெல்வேலி மாநகர் மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில் திருநெல்வேலி நகரம் ரதவீதிகளில் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடைபெற்றது.
இப்போராட்டத்துக்கு இளைஞர் பாசறை மாவட்டச் செயலர் மு.ஹரி ஹரசிவங்கர் தலைமை வகித்தார். அமைப்பின் மாவட்டத் தலைவர் ஆறுமுகம் என்ற கார்த்திக், துணைத் தலைவர்கள் கல்யாணசுந்தரம், வினிதா, பொருளாளர் அரவிந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் எம்.பி. க்கள் வசந்தி முருகேசன், கே.ஆர்.பி. பிரபாகரன், எம்.எல்.ஏ. க்கள் நயினார் நாகேந்திரன், முத்துசெல்வி, துணை மேயர் பூ. ஜெகநாதன் உட்பட திரளானோர் பங்கேற்றனர்.