முகப்பு
தற்போதைய செய்திகள்

கோ-ஆப்டெக்ஸிஸ் அண்ணாமலைப் பல்கலை. மாணவர்களுக்கு 5 சதவீதம் கூடுதல் சிறப்பு தள்ளுபடி

அண்ணாமலைப் பல்கலை. நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா வேண்டுகோளை ஏற்று பல்கலைக்கழக ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்கு கோ-ஆப்டெக்ஸ் விற்பனையில் கூடுதலாக 5 சதவீதம் சிறப்பு தள்ளுபடி

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:58 AM
பகிர்:

அண்ணாமலைப் பல்கலை. நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா வேண்டுகோளை ஏற்று பல்கலைக்கழக ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்கு கோ-ஆப்டெக்ஸ் விற்பனையில் கூடுதலாக 5 சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக முத்தையா ஹாலில் கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு கண்காட்சி மற்றும் விற்பனை நிலையம் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. பல்கலைக்கழக நிர்வாகியும், தமிழகஅரசு முதன்மைச் செயலாளருமான ஷிவ்தாஸ்மீனா பங்கேற்று குத்துவிளக்கேற்றி முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். அப்போது பல்கலைக்கழக ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்கு விற்பனையில் கூடுதல் சலுகை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அதனை ஏற்று கோ-ஆப்டெக்டர் மேலாளர் சி.ராஜேந்திரன் தற்போது வழங்கப்படும் 30 சதவீத தள்ளுபடியுடன் மேலும் 5 சதவீதம் சேர்த்து 35 சதவீத சிறப்பு தள்ளுபடி வழங்கப்படும் என தெரிவித்தார்.

விழாவில் பல்கலைக்கழக பதிவாளர் என்.பஞ்சநதம், பல்கலைக்கழக மாவட்ட வருவாய் அலுவலர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், தேர்வுக்கட்டுப்பாட்டி அதிகாரி ஏ.ரகுபதி, கடலூர் மண்டல நிர்வாகக்குழு உறுப்பினர் த.ராமலிங்கம், மண்டல மேலாளர் மா.பார்த்தசாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னர் மண்டல மேலாளர் மா.பார்த்தசாரதி தெரிவித்தது:அரசு ஊழியர்கள், பொதுத்துறை ஊழியர்கள், உள்ளாட்சித்துறை பணியாளர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள் ஆகியோருக்கு கோ-ஆப்டெக்ஸில் வட்டியில்லா சுலப கடன வசதி வழங்கப்படுகிறது. அண்ணாமலைப் பல்கலைக்கழக ஊழியர்களுக்கு ஒப்பந்த விற்பனை அடிப்படையில் சீருடை வழங்கப்படும்.

தங்கமழை திட்டம்: வாடிக்களையாளர்களுக்கு வழங்கப்படும் பரிசு கூப்பனில் சிறப்பு வாசகங்கள் எழுதும் முதல் 10 வாடிக்கையாளர்களுக்கு தலா 4 கிராம் தங்கம் வீதம் 40 கிராம் தங்கமும், தலா 2 கிராம் தங்கம் வீதம் 30 நபர்களுக்கு 60 கிராம் தங்கமும் வழங்கப்படுகிறது. மாதந்தோறும் ரூ.100 முதல் ஆயிரம் வரை 9 மாதங்கள் செலுத்தி வந்தால், 10வது தவனையை கோஆப்டெக்ஸ் நிறுவனம் செலுத்துவதுடன், அவர்களுக்கு சேமிப்பு தொகையுடன் 58 சதவீத அளவிற்கு கூடுதலாக கைத்தறி மற்றும் பட்டு ரக துணிகளை வாங்கிக் கொள்ளலாம் என மா.பார்த்தசாரதி தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.