தற்போதைய செய்திகள்

விருதுநகரில் முந்திரி எண்ணைய் வியாபாரியிடம் ரூ.9 லட்சம் மோசடி 3 பேர் மீது வழக்கு 

விருதுநகரில் முந்திரி எண்ணைய் வியாபாரியிடம் எண்ணைய் வாங்கி ரூ.9 லட்சத்தை மோசடி செய்து ஏமாற்றிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீஸார் தேடி வருகின்றனர்.

எஸ். பாண்டியன்

விருதுநகரில் முந்திரி எண்ணைய் வியாபாரியிடம் எண்ணைய் வாங்கி ரூ.9 லட்சத்தை மோசடி செய்து ஏமாற்றிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீஸார் தேடி வருகின்றனர்.

விருதுநகர் குருசாமி கொத்தனார் தெருவில் வசித்து வருபவர்  பாலகிருஷ்ணன்(48). இவர் இப்பகுதியில் முந்திரிக்கொட்டைகளில் இருந்து எண்ணைய் எடுக்கும் தொழில் மற்றும் பிண்ணாக்கு வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் இவரிடம் இருந்து மைசூர் மல்லேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ், பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்த கதிர்வேலன், கிருஷ்ணசாமி ஆகிய 3 பேரும் சேர்ந்து 1050 டின் முந்திரி எண்ணைய் வாங்கினார்களாம். மேலும், இதற்கான தொகை ரூ.9 லட்சத்தை இரண்டு நாள்களாக தருவதாக கூறிச் சென்ற நிலையில் திருப்பி தரவில்லையாம். மேலும், பலமுறை அவர்களை தொடர்பு கொண்டு பேசியதில் தரமறுத்துள்ளனர்.

இது தொடர்பாக விருதுநகர் ஜே.எம்.நீதிமன்றத்தில் பாலகிருஷ்ணன் மனுத்தாக்கல் செய்தார். அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட நீதிபதி சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தினர் வழக்கு பதிவு செய்ய உத்தரவித்தார். அதையடுத்து, விருதுநகர் பஜார் காவல் நிலையத்தில் குறிப்பிட்ட 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ளவர்கள் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மணிமேகலை விருது பெற்றவா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

அந்தமான்: 7 பேருடன் சென்ற ஹெலிகாப்டா் கடலில் விழுந்து விபத்து

இந்தியா-இஸ்ரேல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தப் பேச்சு தொடக்கம்

குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்பு

ஒய்எஸ்ஆா் காங். ஆட்சியில் 60 லட்சம் கிலோ கலப்பட நெய் மூலம் திருப்பதி லட்டு தயாரிப்பு: சந்திரபாபு நாயுடு

SCROLL FOR NEXT