முகப்பு
தற்போதைய செய்திகள்

பழனி ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் பொருட்கள் திருட்டு

பழனியை அடுத்த பாப்பம்பட்டி அருகே குப்பம்பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது.  இப்பள்ளியின் தலைமையாசிரியராக சரஸ்வதி பணியாற்றி வருகிறார். 

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:58 AM
பகிர்:

பழனி அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பொருட்கள் திருட்டு போயின.

பழனியை அடுத்த பாப்பம்பட்டி அருகே குப்பம்பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது.  இப்பள்ளியின் தலைமையாசிரியராக சரஸ்வதி பணியாற்றி வருகிறார்.  புதன்கிழமை பள்ளிக்கூடத்தை அடைத்து விட்டு சென்ற நிலையில் வியாழக்கிழமை பள்ளிக்கூடத்தை திறக்க வந்த போது பள்ளிக்கூடத்தில் கதவை மர்மநபர்கள் உடைத்து திறந்து சென்றிருப்பதும், பள்ளிக்கூடத்தில் இருந்த கணினி, மைக், ஆம்ப்ளிபயர் ஆகியவற்றை திருடி சென்றது தெரியவந்தது. 

வந்த நபர் பணம் கிடைக்குமா என்ற நோக்கில் பீரோவில் இருந்த பைல்கள் அனைத்தையும் திறந்து பார்த்ததால் அனைத்தும் சிதறிக்கிடந்தது.  பள்ளியில் மேலும் கணினிகள் இருந்த நிலையில் ஒன்று மட்டும் காணாமல் போயிருந்ததை பார்க்கும் பட்சத்தில் ஒருவர் மட்டுமே திருட வந்திருக்கலாம் என போலீஸார் யூகித்துள்ளனர். 

சம்பவம் குறித்து தலைமையாசிரியர் சரஸ்வதி கொடுத்த புகாரின் பேரில் பழனி தாலுகா போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.