சிதம்பரம் அருகே மின்மாற்றியில் அடிபட்டு இறந்த பெண் மயில்!
சேத்தியாத்தோப்பு அருகே சின்னக்குப்பம் கிராமத்தில் உள்ள மின்வாரிய மின்மாற்றியில் (டிரான்ஸ்பார்மர்) அடிபட்டு அழகிய பெண் மயில் ஒன்று இறந்த கிடப்பதாக, அப்பகுதி மக்கள் சிதம்பரம் வனத்துறையினருக்கு
சிதம்பரம் அருகே உள்ள சேத்தியாத்தோப்பில் மின்மாற்றியில் (டிரான்ஸ்ஃபார்மர்) அடிபட்டு அழகிய பெண் மயில் ஒன்று இறந்தது.
சேத்தியாத்தோப்பு அருகே சின்னக்குப்பம் கிராமத்தில் உள்ள மின்வாரிய மின்மாற்றியில் (டிரான்ஸ்பார்மர்) அடிபட்டு அழகிய பெண் மயில் ஒன்று இறந்த கிடப்பதாக, அப்பகுதி மக்கள் சிதம்பரம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த சிதம்பரம் வனவர் பி.சோமசுந்தரம் தலைமையில் வனத்துறையினர் அக்கிராமத்திற்கு சென்று இரண்டரை வயது பெண் மயிலை கைப்பற்றி, புவனகிரி கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர் இறந்த மயிலை புவனகிரி வெள்ளாற்றங்கரையில் புதைத்தனர்.