ரயில் தடம் புரளுவதை தடுக்க புதிய கருவி: கலசலிங்கம் மாணவர் வடிவமைப்பு
ரயில் தண்டவாளத்திலிருந்து தடம் புரளுவதைத் தடுக்க புதியதாக ஒரு கருவியை, விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழக மாணவர்கள் வடிவமைத்துள்ளனர்
தற்போதைய செய்திகள்ரயில் தடம் புரளுவதை தடுக்க புதிய கருவி: கலசலிங்கம் மாணவர் வடிவமைப்பு
ரயில் தண்டவாளத்திலிருந்து தடம் புரளுவதைத் தடுக்க புதியதாக ஒரு கருவியை, விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழக மாணவர்கள் வடிவமைத்துள்ளனர்
ரயில் தண்டவாளத்திலிருந்து தடம் புரளுவதைத் தடுக்க புதியதாக ஒரு கருவியை, விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழக மாணவர்கள் வடிவமைத்துள்ளனர்.
கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறை படிக்கும் மாணவர்கள் வினோத்குமார், விஷ்ணவர்த்தன், திலீப்குமார் ஆகியோர் துறைத் தலைவர் பள்ளிகொண்டராஜசேகரன், பேராசிரியை தனலட்சுமி ஆகியோரின் ஆலோசனையின்படி, ரயில் தண்டவாளத்திலிருந்து தடம் புரளுவதைத் தடுக்க புதிய கருவி ஒன்றை வடிவமைத்தனர்.
தண்டவாளத்தில் இடைவெளி, மேல்மட்டம் உயரம் வேறுபட்டால் ஆங்காங்கே பிளவுகள் ஏற்பட்டாலும் ரயில் அதன்மீது செல்லும்போது தடம் புரண்டு விபத்துக்கள் ஏற்படுகிறது.தற்போது தண்டவாளத்தின் அகலம் மற்றும் உயரத்தை (ஏற்றம் மற்றும் இறக்கம்) ரயில் புறப்படுவதற்கு முன் தள்ளுவண்டி மூலம் பரிசோதகர்கள் சென்று வெர்னியர் மூலம் அளந்து கணக்கிடுகின்றனர். இதற்காக நேரம் அதிகமாவதுடன், துல்லியமில்லாமலும் உள்ளது. இக் குறைபாட்ட போக்கவே இந்த இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இக் கருவியில் சென்சார், மைக்ரோகண்ட்ரோலர், எல்.சி.டி. ஆகியவை உள்ளன.
தண்டவாளத்தின் அகலம் மற்றும் ஏற்ற, இறக்கத்தை சென்சாரில் இருந்து வரும் ஒளிக்கதிர் மூலம் தண்டவாளத்தின் இரு புறத்தையும் அளவிடலாம். மைக்ரோ கண்ட்ரோலரில் பதிந்து வைக்கப்பட்டுள்ள புரோக்கிராம் வழியாக தண்டவாளத்தினுடைய ஏற்ற இறக்கம் மற்றும் அகலத்தின் வேறுபாடுகளை எல்.சி.டி. வாயிலாக அறிந்து கொள்ளலாம். பின்னர் உடனே அதனை சரிசெய்து மறுபடியும் துல்லியமாக இருக்கிறதா என்று பார்த்து பின்னர் ரயிலை அனுமதிக்கலாம்.
இந்தக் கருவியை முதலில் பரிசோதனை செய்ய தள்ளுவண்டியில் எடுத்துச் செல்லும்போது தண்டவாளத்தில் மாற்றம் இருந்தால் தள்ளுவண்டி நின்றுவிடும்.தற்போதைய அளவியான வெர்னியர் கேஜிலிருந்து வேலைப்பளுவைக் குறைக்கும் வகையில் இக் கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது. தண்டவாளத்தில் உள்ள குறைபாடுகளை ஆய்வின்போது இக் கருவி கண்டறிந்து அலாரம் ஒலி எழுப்பப்பட்டு ட்ராலி நிறுத்தப்படும். பணியாளர்கள் உடனடியாக குறைபாடு உள்ள இடத்திற்குச் சென்று சரி செய்யலாம்.இக் கருவி சமூகம் சார்ந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாய் மாணவர்கள் கூறினர்.
இக் கருவியைக் கண்டுபிடித்த மாணவர்களை வேந்தர் க.ஸ்ரீதரன், துணை வேந்தர் ச.சரவணசங்கர், பிதாவிலர் வெ.வாசுதேவன் உள்ளிட்டோர் பாராட்டினர்.