சுங்கச் சாவடி அருகே அரசு பஸ் மோதி போலீஸ் பலி
வாலாஜாவை அடுத்த சென்னசமுத்திரம் பகுதியில் அமைந்துள்ள சுங்கச் சாவடியில் பஸ் மோதி தலைமைக் காவலர் ஒருவர் உயிரிழந்தார்.
வாலாஜாவை அடுத்த சென்னசமுத்திரம் பகுதியில் அமைந்துள்ள சுங்கச் சாவடியில் பஸ் மோதி தலைமைக் காவலர் ஒருவர் உயிரிழந்தார்.
வாலாஜாவை சேர்ந்த முரளிதரன் (43) என்பவர் ஸ்ரீ பெரும்புதுரில் போக்குவரத்து துறை தலைமை காவலராக பணி புரிந்து வந்தார். இவர் இன்று காலை வாலஜாவில் உள்ள தனது வீட்டில் இருந்து பணிக்கு சென்ற போது டூவீலரில் அந்த வழியாக வந்த ஒருவரிடம் லிப்டு கேட்டு சென்றுள்ளார். அப்போது தருமபுரியில் இருந்து சென்னை வந்த அரசு பேருந்து ஒன்று வாலாஜாவை அடுத்த சென்னசமுத்திரம் பகுதியில் அமைந்துள்ள சுங்கச் சாவடி அருகே அவர் மீது மோதியதில் இதில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். இதுகுறித்து போலீஸார வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.