நீர்பிடிப்பு பகுதியில் மழை: மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு
மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்ததை அடுத்து மணிமுத்தாறு அணை புதன்கிழமை மூடப்பட்டது. மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்ததை அடுத்து மணிமுத்தாறு அணை புதன்கிழமை மூடப்பட்டது. மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் செவ்வாய்க்கிழமை பரவலாக மழை பெய்தது. புதன்கிழமை காலை நிலவரப்படி பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்): பாபநாசம் கீழ் அணை-3, சேர்வலாறு அணை-7, மணிமுத்தாறு-23.6, கடனாநதி அணை-3, ராமநதி அணை-11, கருப்பாநதி அணை-10, குண்டாறு அணை-3.2.
அதிகபட்சம் 75.5 மி.மீ: அதிகபட்சமாக அம்பாசமுத்திரத்தில் 75.5 மி.மீ மழையும், கன்னடியன் அணைக்கட்டில் 47 மி.மீ மழையும், ஆய்க்குடியில் மி.மீ 50 மழையும்,
செங்கோட்டையில் 2 மி.மீ மழையும், தென்காசியில் 39.2 மி.மீ மழையும் பெய்துள்ளது.
மணிமுத்தாறு மூடல்: மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்ததை அடுத்து புதன்கிழமை மணிமுத்தாறு அணை மூடப்பட்டது. பாபநாசம் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டது. பாபநாசம் அணையில் இருந்து 512.75 கனஅடியும், கடனாநதி அணையில் 105 கனஅடியும், ராமநதி அணையில் 40 கனஅடியும், கருப்பாநதி அணையில் 10 கனஅடியும், அடவிநயினார் அணையில் 20 கனஅடியும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
அணைகளின் நீர்மட்டம்: பாபநாசம் அணையின் நீர்மட்டம் 63.60 அடியாகவும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 73.92 அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 54.57 அடியாகவும், கடனாநதி அணையின் நீர்மட்டம் 51.00 அடியாகவும், ராமநதி அணையின் நீர்மட்டம் 46.50 அடியாகவும், கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 39.01 அடியாகவும், குண்டாறு அணையின் நீர்மட்டம் 36.10 அடியாகவும், அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 108.75 அடியாகவும் இருந்தது.
சாரல் மழை: புதன்கிழமை பாளையங்கோட்டை வண்ணார்பேட்டையில் சாரல் மழை பெய்தது.