தற்போதைய செய்திகள்

விருதுநகர் மாவட்டத்தில் விலை உயர்வை கட்டுப்படுத்தக் கோரி மறியல் போராட்டம்: 970 பேர் கைது

விருதுநகர் பழைய பேருந்து நிலையம் முன்பு நடந்த மறியல் போராட்டத்திற்கு மாநிலக்குழு உறுப்பினர் சமுத்திரம் தலைமை வகித்தார். வட்டாரச் செயலாளர் சீனிவாசன் முன்னிலை வகித்தார். இதில், விலைவாசி

எஸ். பாண்டியன்

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் 970 பேரை போலீஸார் கைது செய்தனர்.

விருதுநகர் பழைய பேருந்து நிலையம் முன்பு நடந்த மறியல் போராட்டத்திற்கு மாநிலக்குழு உறுப்பினர் சமுத்திரம் தலைமை வகித்தார். வட்டாரச் செயலாளர் சீனிவாசன் முன்னிலை வகித்தார். இதில், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துதல், விருதுநகர் மாவட்டத்தை வறட்சி பாதிக்கப்பட்ட மாவட்ட அறிவித்து விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்குதல், தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தை செயல்படுத்துவதுடன் அதை 200 நாட்களாக அதிகரிக்கவும், ஊதியம் ரூ.400 ஆக உயர்த்தவும், வீடு கட்ட ரூ. 10 லட்சம் நிதி கடனுதவி மற்றும் விவசாயிகளுக்கான மாதாந்திர ஓய்வூதியம் ரூ.3000ம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பழைய பேருந்து நிலையம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு பணிக்கு நிறுத்தப்பட்டிருந்த மேற்கு காவல் போலீஸார் 38 பெண்கள் உள்பட 67 பேரை கைது செய்து தனியார் அரங்கத்தில் சிறை வைக்கப்பட்டனர்.

இதேபோல், காரியாபட்டி பேருந்து நிலையம் முன்பு நடந்த மறியல் போராட்டத்திற்கு விவசாயிகள் சங்கத்தின் ஒன்றியச் செயலாளர் ரவிசந்திரன் தலைமையில் 58 ஆண்கள் உள்பட 72 பேரும், அருப்புக்கோட்டை இந்தியன் வங்கியின் முன்பு நகரச் செயலாளர் இளங்கோ தலைமையில் 17 பேரும், ராஜபாளையத்தில் எஸ்.பி.ஐ வங்கியின் முன்பு விவசாயிகள் சங்கத்தின் நகர செயலாளர் ரவி தலைமையில் 40 பேரும், கீழகுலராஜராமன் பேருந்து நிறுத்தம் முன்பு மேற்கு ஒன்றியத் தலைவர் முத்துமாரி தலைமையில் 56 பேரும், சேத்தூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் முன்பு முன்னாள் மக்களவை உறுப்பினர் ஆர்.லிங்கம் தலைமையில் 250 பேரும், சாத்தூர் முக்குராந்தல் பகுதியில் மாநில குழு உறுப்பினர் சாமிநாதன் தலைமையில் 29 பேரும்,

ஆலங்குளம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் முன்பு ஊராட்சி ஒன்றியச் செயலாளர் நடராஜன், ஸ்ரீவில்லிபுத்தூரில் இந்தியன் வங்கி முன்பு சட்டப்பேரவை உறுப்பினர் பொன்னுப்பாண்டியன் தலைமையில் 100 பெண்கள் உள்பட 130 பேரும், வத்திராயிருப்பு வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு ஒன்றிய செயலாளர் சரவணன் தலைமையில் 205 பேரும், திருச்சுழியில் எம்.ரெட்டியபட்டி ஊராட்சி ஒன்றியம் அலுவலகம் முன்பு ஒன்றிய செயலாளர் பாண்டியராஜ் தலைமையில் 25 பேரும், நரிக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நகரச் செயலாளர் கனகராஜ் தலைமையில் 39 பேரும் என மொத்தம் ஆண்கள்-604 பேரும், பெண்கள்-366 பேரும் என மொத்தம் 970 பேரை போலீஸார் கைது செய்து அந்தந்த பகுதியில் உள்ள தனியார் அரங்கத்தில் சிறை வைக்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போக்சோ வழக்கில் பெண் உள்பட இருவருக்கு 20 ஆண்டுகள் சிறை

பெரியகுளத்தில் மழை

வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்ற முதியவா் கைது

ஐபிஎஸ் அதிகாரி ஆசிஷ் ராவத் மீது வழக்கு: விசாரணை நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

வீட்டுமனைப் பட்டாவுக்கு நிலம் ஒதுக்கக் கோரி முற்றுகை

SCROLL FOR NEXT