முகப்பு
தற்போதைய செய்திகள்

ஜெயலலிதாவிற்கு ஜாமீன்: விருதுநகரில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவிற்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஜாமீன் வழங்கியதைத் தொடர்ந்து, விருதுநகரில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள்.

Updated On : 17 அக்டோபர், 2014 at 5:27 PM
பகிர்:
Updated On : 5 ஜனவரி, 2024 at 12:32 PM

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவிற்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஜாமீன் வழங்கியதைத் தொடர்ந்து, விருதுநகரில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள்.

உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் வழங்கிய தகவலை அறிந்து கொண்ட அதிமுகவினர் விருதுநகர் தேசபந்து மைதானத்தில் மாவட்ட அவைத் தலைவர் மற்றும் நகராட்சி உறுப்பினருமான ஐ.மருது தலைமையில், நகராட்சி தலைவர் மா.சாந்தி, ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் கி.கலாநிதி உள்ளிட்ட அதிமுகவினர் திரண்டனர். பின்னர் அங்கு பட்டாசுகள் வெடித்து மகிழ்ச்சியை கொண்டாடினார்கள்.

அதையடுத்து, பழைய பேருந்து நிலையம், பஜார், தெப்பக்குளம் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து சாத்தூர் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர்.சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

Advertisement

இந்நிகழ்ச்சியில் அண்ணா தொழிற்சங்க பேரவையின் மாநில செயலாளர் சங்கரலிங்கம், அதிமுக நகரச் செயலாளர் நயினார் முகமது, நகராட்சி துணைத் தலைவர் எஸ்.மாரியப்பன், ஒன்றியக் குழு துணைத் தலைவர் மற்றும் ஊராட்சி ஒன்றியச் செயலாளர் மூக்கையா, நகராட்சி உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிள் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.