முகப்பு
தற்போதைய செய்திகள்

அருப்புக்கோட்டையில் முன்னாள் படைவீரர்களுக்கான குறை தீர் கூட்டம்

முன்னாள் படை வீரர் நல உதவி அலுவலகம் சார்பில் முன்னாள் ராணுவத்தினருக்கான குறை தீர்க்கும் நாள் கூட்டம் அருப்புக்கோட்டை வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் வருகிற 24-ம் தேதி நடைபெற இருக்கிறது.

Updated On : 18 அக்டோபர், 2014 at 11:21 AM
பகிர்:
Updated On : 5 ஜனவரி, 2024 at 12:33 PM

முன்னாள் படை வீரர் நல உதவி அலுவலகம் சார்பில் முன்னாள் ராணுவத்தினருக்கான குறை தீர்க்கும் நாள் கூட்டம் அருப்புக்கோட்டை வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் வருகிற 24-ம் தேதி நடைபெற இருக்கிறது.

இக்கூட்டத்தில், அருப்புக்கோட்டை, திருச்சுழி மற்றும் காரியாபட்டி வட்டார பகுதிகளைச் சேர்ந்த முன்னாள் படை வீரர்கள், அவர்களை சார்ந்தோர்கள் பயனடையும் வகையில் நடத்தப்படுகிறது.

இதில், அசல் படை விலகல் சான்று, அடையள அட்டை மற்றும் பல்வேறு ஆவணங்களுடன் உதவி இயக்குநரை சந்தித்து குறைகளை நேரில் தெரிவிக்கலாம். அதோடு, புதிதாக நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ள நலத்திட்டங்கள் மற்றும் ராணுவ ஆள்சேர்ப்பு பற்றியும் எடுத்துரைக்கப்பட உள்ளனர். எனவே இந்த முகாமில் முன்னாள் படைவீரர்கள், அவரைச் சார்ந்தோர் ஆகியோர் இம்முகாமில் பங்கேற்று பயனடையுமாறு ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.  

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.