நெல்லையப்பர் கோயில் திருக்கல்யாணத் திருவிழா: நெல்லை காட்சிமண்டபத்தில் சுவாமி-அம்மன் எழுந்தருளல்
திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர்-காந்திமதி அம்மன் கோயில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழாவையொட்டி திருநெல்வேலி நகரத்தில் உள்ள காட்சிமண்டபத்தில்
திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர்-காந்திமதி அம்மன் கோயில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழாவையொட்டி திருநெல்வேலி நகரத்தில் உள்ள காட்சிமண்டபத்தில் சுவாமியும், அம்மனும் திங்கள்கிழமை எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர்-காந்திமதியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில் திருக்கல்யாணத் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான விழா கடந்த 10 ஆம் தேதி காந்திமதி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து திருவிழா நாள்களில் தினமும் காலை மற்றும் இரவில் காந்திமதியம்மனுக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை, நான்கு ரத வீதிகளிலும் வீதியுலா நடைபெற உள்ளது.
ஞாயிற்றுக்கிழமை) இரவு 1 மணி அளவில் காந்திமதி அம்மன் சன்னதியில் இருந்து தங்க முலாம் பூசப்பட்டச் சப்பரத்தில் புறப்பட்டு கீழரதவீதி, தெற்கு ரதவீதி, பேட்டை சாலை வழியாக அருள்மிகு கம்பாநதி காமாட்சி அம்மன் திருக்கோயிலை அடைந்தார். அதைத்தொடர்ந்து திங்கள்கிழமை பிற்பகலில் சிறப்பு அலங்காரத்துடன் சுவாமி-அம்மன் காட்சிமண்படத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அப்போது மாலைமாற்றும் வைபவமும் நடைபெற்றது. பின்பு சுவாமி-அம்மன் திருநெல்வேலி நகரின் நான்கு ரத வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர்.
தொடர்ந்து செவ்வாய்க்கிழமை (அக்.21) அதிகாலை 4.15 மணிக்கு மேல் 4.45 மணிக்குள் காந்திமதியம்மன் கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் வைத்து திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளது. 21 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை அம்மன் கோயில் ஊஞ்சல் மண்டபத்தில் அம்மனின் ஊஞ்சல் விழா நடைபெறும். 24 ஆம் தேதி இரவு சுவாமி-அம்மன் ரிஷப வாகனத்தில் மறுவீடு பட்டினப்பிரவேச வீதியுலா நடைபெற உள்ளது.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் செயல்அலுவலர் ந.யக்ஞநாராயணன் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.