ஜன நாயகன் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு?
ஜன நாயகன் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
ஜன நாயகன் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவான ஜன நாயகன் திரைப்படம் சென்சார் பிரச்னைகளால் பொங்கல் வெளியீட்டிலிருந்து ஒத்திவைக்கப்பட்டது. பின், மறுதணிக்கை மற்றும் தேர்தல் காரணங்களால் தொடர் குழப்பங்களையும் தடுமாற்றங்களையும் சந்தித்தது.
சில வாரங்களுக்கு முன் ஜன நாயகன் படம் முழுவதும் சமூக வலைதளங்களில் சட்டவிரோதமாக வெளியானது. இது, திரையுலகம் மற்றும் ரசிகர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விசாரணையில் படத்தின் எடிட்டரிடம் வேலை பார்த்த ஒருவர் மூலம் இப்படம் கசிந்தது தெரிய வந்துள்ளது.
Advertisement
Advertisement
தேர்தல் முடிந்த பிறகு படம் வெளியாக வாய்ப்பிருப்பதாகக் கூறப்பட்ட நிலையில், இன்று சென்சார் அதிகாரிகள் இருவர் படத்தைப் பார்த்து சான்றிதழ் தொடர்பான விவரங்களை வழங்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகின.
சான்றிதழ் விரைவில் கிடைக்கும் பட்சத்தில் ஜன நாயகன் திரைப்படம் மே 8 அன்று வெளியாகும் என்று கூறப்படுகிறது. படம் ஏற்கனவே இணையத்தில் கசிந்திருந்தாலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு குறையவில்லை என்று ரசிகர்கள் இணையத்தில் தெரிவித்து வருகின்றனர்.
Jananayagan Release Date Announcement?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.