போடிமெட்டு மலைச்சாலையில் பாறை சரிவுகள் அகற்றும் பணி தீவிரம்: தொடர் மழையால் நெடுஞ்சாலைத்துறையினர் அவதி
போடிமெட்டு மலைச்சாலையில் பாறை சரிவுகள் அகற்றும் பணி தீவிரம்: தொடர் மழையால் நெடுஞ்சாலைத்துறையினர் அவதிபோடி,
போடிமெட்டு மலைச்சாலையில் பாறை சரிவுகள் அகற்றும் பணி தீவிரம்: தொடர் மழையால் நெடுஞ்சாலைத்துறையினர் அவதிபோடி,
போடிமெட்டு மலைச்சாலையில் பாறை சரிவுகளை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தொடர் மழையினால் பாறைகளை அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத்துறையினர் அவதிப்பட்டு வருகின்றனர். போடிமெட்டு மலைச்சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் கன மழையினால் பல இடங்களில் பாறை, மண் சரிவுகள் ஏற்பட்டுள்ளன. திங்கள் கிழமை மாலை 5-வது கொண்டை ஊசி வளைவுக்கு மேல் ஏற்பட்ட பாறைகள் சரிவினால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மேலும் 2-வது கொண்டை ஊசி வளைவில் சாலையின் தடுப்புச் சுவர் மற்றும் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் இச்சாலையில் வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. புதன் கிழமை தீபாவளி பண்டிகை என்பதால் போக்குவரத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்திரவிட்டார். இதனையடுத்து நெடுஞ்சாலைத்துறையினர் பாறைகளை அகற்றும் பணியில் செவ்வாய் கிழமை காலை முதலே ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் இச்சாலையில் காலை முதலே தொடர்ந்து கனமழையும் பெய்து வருவதால் சாலை சீரமைப்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. மேலும் பல இடங்களில் மண் மற்றும் பாறைகள் சரிய தொடங்கியுள்ளன. இதனால் நெடுஞ்சாலைத்துறையினர் திண்டாடி வருகின்றனர். செவ்வாய் கிழமை பிற்பகலுக்குள் சாலை சீரமைக்கப்பட்டு போக்குவரத்துக்கு திறக்கப்படுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.