நெல்லை அருகே டிப்பர் லாரி மோதி இருவர் சாவு
பாளையங்கோட்டை அருகே வியாழக்கிழமை டிப்பர் லாரி மோதியதில் மோட்டார் சைக்கிளில் வந்த தனியார் நிறுவன பணியாளர்கள் இருவர் இறந்தனர்.
பாளையங்கோட்டை அருகே வியாழக்கிழமை டிப்பர் லாரி மோதியதில் மோட்டார் சைக்கிளில் வந்த தனியார் நிறுவன பணியாளர்கள் இருவர் இறந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் தெற்குத் தெருவை சேர்ந்தவர் மூக்கன் மகன் ஆறுமுகம் (48). ராமனாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரை சேர்ந்தவர் முகம்மது கோயா மகன் முகம்மதுநசீர் (36). நண்பர்களாகன இருவரும் மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணி செய்து வந்தனர்.
தீபாவளி விடுமுறைக்கு சொந்த ஊருக்கு சென்ற முகம்மதுநசீர் வியாழக்கிழமை ஓட்டப்பிடாரத்தில் உள்ள ஆறுமுகம் வீட்டிற்கு வந்தாராம். மாலையில் இருவரும் மோட்டார் சைக்கிளில் மார்த்தாண்டத்திற்கு சென்றனர். மோட்டார் சைக்கிளை ஆறுமுகம் ஓட்டினாராம்.
பாளையங்கோட்டை அருகே சிவலப்பேரியில் தாமிரவருணி ஆற்றுப் பாலத்தில் வந்தபோது, எதிரே வந்த டிப்பர் லாரி மோட்டார் சைக்கிள் மீது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இருவரும் பலத்த காயமடைந்தனர். இதில் ஆறுமுகம் சம்பவ இடத்திலே இறந்தார். பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட முகம்மதுநசீர் அங்கு இறந்தார். இது குறித்து சிவலப்பேரி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.