முகப்பு
தற்போதைய செய்திகள்

பாளையங்கோட்டை அருகே இளைஞர் வெட்டிக் கொலை

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை அருகே இளைஞர் செவ்வாய்க்கிழமை வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

Updated On : 28 அக்டோபர், 2014 at 7:42 PM
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை அருகே இளைஞர் செவ்வாய்க்கிழமை வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

பாளையங்கோட்டை அருகே உள்ள கொமந்தானூர் பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் மகன் மகேஸ் (28). மள்ளர் மீட்புக் கழகத்தின் மாவட்ட நிர்வாகியான இவர், நிலம் வாங்கி-விற்கும் தொழிலும் செய்து வந்தார். இந்நிலையில், பர்கிட்மாநகரத்துக்கு தனது பைக்கில் மகேஸ் செவ்வாய்க்கிழமை சென்றாராம். அங்குள்ள பள்ளி அருகே சென்றபோது மகேஸை சுற்றி வளைத்த கும்பல் அரிவாளால் வெட்டியதாம்.

இதில் பலத்த காயமடைந்த மகேஸ் சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவலறிந்ததும் பாளையங்கோட்டை தாலுகா போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்கள். 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.