முகப்பு
தற்போதைய செய்திகள்

இளங்கலையில் தங்கப் பதக்கம் பெற்ற பார்வையற்ற மீனவப் பெண்: ஆசிரியர் ஆக லட்சியமாம்!

நாகர்கோவிலைச் சேர்ந்த மீன் பிடி தொழிலாளியின் பார்வையற்ற மகள் பிஏ பட்டப் படிப்பில் தங்கப் பதக்கம் பெற்றார்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 7:08 AM
பகிர்:

நாகர்கோவிலைச் சேர்ந்த மீன் பிடி தொழிலாளியின் பார்வையற்ற மகள் பிஏ பட்டப் படிப்பில் தங்கப் பதக்கம் பெற்றார்.

நாகர்கோவில் அருகேயுள்ள மணவாளக்குறிச்சியை அடுத்த சின்னவளை கிராமத்தைச் சேர்ந்த மீனவர் சகாயதாசன். இவரது மனைவி மங்களமேரி. இவர்களது மகள் சகாய மனோஜி (21). இவர், நாகர்கோவிலில் உள்ள கிறிஸ்தவ மகளிர் கல்லூரியில் பிஏ வரலாறு மற்றும் சுற்றுலா பட்டப்படிப்பு பயின்றார். மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்துக்கு கீழ் இயங்கும் இந்த கல்லூரியில் பயின்ற இவர், பல்கலைக் கழக அளவில் தங்கப் பதக்கம் வென்றார். இதற்கான பட்டமளிப்பு விழா, சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.