ஏற்காடு மலைப்பாதையில் கார் உருண்டு விபத்து: பெண் காயம்
சேலம் மாவட்டம், ஏற்காடு ஐந்து ரோடு பகுதி தனியார் ஹோட்டல் உரிமையாளர் எஸ்வின் குமார் இவரது மனைவி கவிதா (35) செவ்வாய் கிழமை மதியம் 1 மணியவில் ஏற்காட்டிலிருந்து சேலத்திற்கு
சேலம் மாவட்டம், ஏற்காடு ஐந்து ரோடு பகுதி தனியார் ஹோட்டல் உரிமையாளர் எஸ்வின் குமார் இவரது மனைவி கவிதா (35) செவ்வாய்கிழமை மதியம் 1 மணியவில் ஏற்காட்டிலிருந்து சேலத்திற்கு காரை ஓட்டிச் சென்ற போது 16 வது கொண்டை ஊசி வளைவு அருகே கட்டுப்பாட்டை இழந்து 200 அடி பள்ளத்தில் உருண்டது. இதில் கவிதாவின் கழுத்து பகுதி பலத்த காயம் ஏற்பட்டு சேலம் தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்காடு காவல் துறையினர் வழக்கு பதிந்து விசாரனை நடத்தி வருகின்றனர்.