முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரம் அருகே வெள்ளாற்றங்கரையில் கை மற்றும் கால்கள் கட்டப்பட்டு காயங்களுடன் ஆண் சடலம்

சிதம்பரம் அருகே தீத்தாம்பாளையம் பாலத்தின் அருகே யூனூஸ்நகர் எனுமிடத்தில் வெள்ளாற்றங் கரையோரம் புதன்கிழமை காலை உடலில் காயங்களுடன் கை மற்றும் கால்கள் கட்டப்பட்ட நிலையில் 55 வயது மதிக்கத்தக்க

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:40 AM
பகிர்:

சிதம்பரம் அருகே வெள்ளாற்றங்கரையில் உடலில் காயங்களுடன் கை மற்றும் கால்கள் கட்டப்பட்ட நிலையில் 55 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் புதன்கிழமை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சிதம்பரம் அருகே தீத்தாம்பாளையம் பாலத்தின் அருகே யூனூஸ்நகர் எனுமிடத்தில் வெள்ளாற்றங் கரையோரம் புதன்கிழமை காலை உடலில் காயங்களுடன் கை மற்றும் கால்கள் கட்டப்பட்ட நிலையில் 55 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கரை ஒதுங்கியது. உடலுடன் நீண்ட கயிறு கட்டப்பட்டுள்ளது. கொலை செய்து உடலில் கயிற்றை கட்டி பாலத்திலிருந்து ஆற்றில் தூக்கிப் போட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். இறந்தவர் பச்சை கலர் கால்சட்டையும், வெள்ளை பணியனும் அணிந்துள்ளார்.

இறந்து போனவர் யார், எந்த ஊர் என்ற விபரம் தெரியவில்லை. தகவல் அறிந்த சிதம்பரம் டிஎஸ்பி ஆர்.ராஜாராம், அண்ணாமலைநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.முருகானந்தம் மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து கிள்ளை போலீஸார் சந்தேகமரணம் என வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.