முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரம் நகராட்சியில் பாஜக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்

சிதம்பரம் நகராட்சியில் காலியாக உள்ள வார்டு 17, வார்டு 20 உறுப்பினர்கள் தேர்தலில் போட்டியிட பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்கள் வியாழக்கிழமை நகராட்சி ஆணையரும், தேர்தல் அதிகாரியுமான ஆர்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:40 AM
பகிர்:

சிதம்பரம் நகராட்சியில் காலியாக உள்ள வார்டு 17, வார்டு 20 உறுப்பினர்கள் தேர்தலில் போட்டியிட பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்கள் வியாழக்கிழமை நகராட்சி ஆணையரும், தேர்தல் அதிகாரியுமான ஆர்.செல்வராஜிடம் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

பாஜக சார்பில் 17 வார்டில் போட்டியிட ஜி.வெங்கடேசன், 20-வார்டில் போட்டியிட எஸ்.திருவேங்கடம் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இந்நிகழ்ச்சியில் வேட்பாளருடன் மாவட்ட பொருளாளர் வே.ராஜரத்தினம், மாநில பொதுக்குழு உறுப்பினர் நடனம் பிள்ளை, மாநில வழக்குரைஞர் பிரிவு நிர்வாகி எம்.பாலக்குமார், மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் எஸ்.வைரபிரகாஷ், நகரத் தலைவர் ஆர்.திருமாறன், மாவட்ட வர்த்தக பிரிவு பொது செயலாளர் கே.ஜெயக்குமார், மாவட்ட விவசாய அணி துணைத் தலைவர் வேலுபிள்ளை, நகரச் செயலாளர் ஆட்டோ நடராஜ் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.