அண்ணாமலைப் பல்கலை. பிஇ, பிஎஸ்சி விவசாயம் இரண்டாம் ஆண்டு மற்றும் இறுதி ஆண்டு வகுப்புகள் செப்.8-ல் தொடக்கம்
மறுதேதி அறிவிப்பு வரை மூடப்பட்டிருந்த அண்ணாமலைப் பல்கலைக்கழக பிஇ., பிஎஸ்சி விவசாயம், தோட்டக்கலை ஆகிய படிப்புகளுக்கான இரண்டாம் ஆண்டு மற்றும் இறுதி ஆண்டு மாணவர்களுக்கான
மறுதேதி அறிவிப்பு வரை மூடப்பட்டிருந்த அண்ணாமலைப் பல்கலைக்கழக பிஇ., பிஎஸ்சி விவசாயம், தோட்டக்கலை ஆகிய படிப்புகளுக்கான இரண்டாம் ஆண்டு மற்றும் இறுதி ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் செப்.8-ம் தேதி திங்கள்கிழமை முதல் தொடங்கப்படும் என பதிவாளர் என்.பஞ்சநதம் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தி: அண்ணாமலைப் பல்கலைக்கழழக வேளாண்மை, தோட்டக்கலை (B.Sc Agri/ horticulture) இரண்டாம் ஆண்டு வகுப்புகள் மற்றும் வேளாண்மை, பொறியியல் முதுநிலை படிப்புகளுக்கான (M.Sc Agri), (ME All Branches) அனைத்து வகுப்புகள், பொறியியல் (BE All Branches) படிப்புகளுக்கான இரண்டாம் ஆண்டு மற்றும் இறுதி ஆண்டு வகுப்புகள் வருகிற செப்.8-ம் தேதி திங்கள்கிழமை முதல் தொடங்கப்படும் என்றும், மேலும் வேளாண்மை மற்றும் பொறியியல் படிப்புகளுக்கான மூன்றாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என பதிவாளர் என்.பஞ்சநதம் தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தை அடுத்து மறுதேதி அறிவிப்பு வரை மூடப்பட்டிருந்த பிஇ முதாலாம் ஆண்டு வகுப்புகள், பிஎஸ்சி வேளாண்மை முதலாம் ஆண்டு வகுப்புகள் கடந்த ஆக.22-ம் தேதி வெள்ளிக்கிழமை முதல் தொடங்கப்பட்டது. பின்னர் பல்கலைக்கழக கலை (Faculty of Arts), அறிவியல் (Faculty of Sciences), கல்வியியல் (Faculty of Education), கடல் அறிவியல் (Faculty of Marine Science) மற்றும் இசைத்துறை (Dept of Music), இந்திய மொழிப்புலம் (Faculty of Indian Languages) அனைத்து பிரிவுகளின், அனைத்து வகுப்புகளும் கடந்த ஆக.27-ம் தேதி முதல் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.