முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரம் இரட்டை கொலை வழக்கு: நாட்டு வெடிகுண்டு தயாரித்த பாபு உள்ளிட்ட இருவர் கைது

சிதம்பரம் அண்ணாமலைநகரில் கடந்த செப்.2-ம் தேதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பிரமுகர்கள் இருவர் தலையை துண்டித்து வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், நாட்டு வெடிகுண்டு தயாரித்த பாபு உள்ளிட்ட

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:42 AM
பகிர்:

சிதம்பரம் அண்ணாமலைநகரில் கடந்த செப்.2-ம் தேதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பிரமுகர்கள் இருவர் தலையை துண்டித்து வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், நாட்டு வெடிகுண்டு தயாரித்த பாபு உள்ளிட்ட இருவரை தனிப்படை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

சிதம்பரம் அண்ணாமலைநகரில் கலுங்குமேட்டில் வசிக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பிரமுகர்களான ஆம்புலன்ஸ் குமார் (34), அவரது தம்பி ராஜேஷ் (32) ஆகிய இருவரையும் கடந்த செப்.2-ம் தேதி செவ்வாய்க்கிழமை அதிகாலை 2.30 மணிக்கு மோட்டார் சைக்கிள்களில் முகத்தை துணியால் மூடிக்கொண்டு வந்த மர்மகும்பல் ஒன்று  வெடிகுண்டு வீசி வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்து, இருவரது தலையை மட்டும் எடுத்துக்கொண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நுழைவுவாயில் முன்பு வைத்துவிட்டு தலைமறைவாகினர். மருத்துவமனை முன்பு வெடிகுண்டு வீசியதில் அங்குள்ள கடை மற்றும் கார் ஒன்று கண்ணாடிகள் உடைந்து சேதமுற்றது. இச்சம்பவத்தில் 6 பேர் படுகாயமுற்று ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவ்வழக்கில் போலீஸாரிடம் சரணடைந்த அண்ணாமலைநகர் தெற்கிருப்பு சிவன்கோயில் தெருவைச் சேர்ந்த பட்டாபிராமன் (28), சிவமணி என்கிற மணிகண்டன் (30), சிவன்கோயில் தெருவைச் பத்தாயிரம் என்கிற வெங்கடேசன் (29), அண்ணாமலைநகர் மண்ரோட்டைச் சேர்ந்த கஜேந்திரன் (28) ஆகிய 4 பேர்  4 பேர், செப்.3-ம் தேதி இரவு சிதம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

தற்போது இவ்வழக்கில் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட நாட்டு வெடிகுண்டுகள் தயாரித்த, சென்னை கொரட்டூர் அண்ணாநகரில் தற்போது வாடகை ஆட்டோ ஓட்டி வரும், சிதம்பரம் அண்ணாமலைநகர் மண்ரோட்டைச் சேர்ந்த பாபு (32) என்பவரையும், அண்ணாமலைநகரில் கோழி கறிக்கடை வைத்துள்ள சிவன்கோயில் தெருவைச் சேர்ந்த மணிகண்டன் (34) ஆகிய இருவரையும் தனிப்படை போலீஸார் சனிக்கிழமை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேற்கண்ட இருவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் சுமார் சத்தியா, சாக்கோட்டை ராஜா, சங்கர்லால், லெஃப்ட் செந்தில், யானை கார்த்தி உள்ளிட்ட 17 பேர் சேர்ந்து இந்த இரட்டை கொலை செய்ததாக போலீஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.