முகப்பு
தற்போதைய செய்திகள்

பொதுமக்கள், மாணவர்களால் தேர்வு செய்யப்பட்ட சிறந்த ஆசிரியர்களுக்கு விருது!

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு சிதம்பரம் ஆர்.கே.ஜி.பவுன்டேஷனும், வின்சாஃப்ட் கணினி பயிற்சி நிறுவனமும் இணைந்து ஆர்.விமல்ராஜ் தலைமையிலான 6 பேர் கொண்ட குழுவினர் நகரில் பொதுமக்களிடமும்,

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:42 AM
பகிர்:

சிதம்பரத்தில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆர்.கே.ஜி பவுன்டேஷன் சார்பில் பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடம் நடத்தப்பட்ட கருத்து கணிப்பு மூலம் தேர்வு செய்யப்பட்ட 15 சிறந்த ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு சிதம்பரம் ஆர்.கே.ஜி.பவுன்டேஷனும், வின்சாஃப்ட் கணினி பயிற்சி நிறுவனமும் இணைந்து ஆர்.விமல்ராஜ் தலைமையிலான 6 பேர் கொண்ட குழுவினர் நகரில் பொதுமக்களிடமும், மாணவர்களிடம் படிவங்கள் மூலம் தங்களது சிறந்த ஆசிரியர்கள் யார் என கருத்து கணிப்பு நடத்தினர். இக்கருத்து கணிப்பில் ஜி.செல்வம், டி.பாண்டிதுரை (அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சிதம்பரம்), சி.கலைச்செல்வி (ஆறுமுகநாவலர் தொடக்கப்பள்ளி), ஜே.சுந்தரலிங்கம், எஸ்.இளங்கோவன், கே.செல்வக்குமார் (ராமசாமி செட்டியார் மேல்நிலைப்பள்ளி), சி.பாஸ்கரன், இ.சசிகலாதேவி (ராணி சீதை ஆச்சி மேல்நிலைப்பள்ளி), வி.முத்துக்குமரன், ஜி.ஜெயந்தி (ஸ்ரீராமகிருஷ்ணா வித்தியாசாலை மேல்நிலைப்பள்ளி), ஜி.செந்தில்குமார் (அரசு மேல்நிலைப்பள்ளி வல்லத்துறை), வி.கல்யாணசுந்தரம் (ஆதிதிராவிட நல மேல்நிலைப்பள்ளி தையூர் காஞ்சிபுரம் மாவட்டம்), எஸ்.தென்னவன் (ஊராட்சி பள்ளி, சிவபுரி) ஆகிய 14 ஆசிரியர்கள் சிறந்த ஆசிரியர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

சிதம்பரம் மாலைக்கட்டித்தெரு ஆறுமுகநாவலர் நிலையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் கலைமாமணி விருது பெற்ற புதுச்சேரி சந்திரஹரி பங்கேற்று ஆசிரியர்களுக்கு விருதினை வழங்கிப் பேசினார். பேராசிரியர் எம்.தெய்வீகசுந்தரம் வழத்துரையாற்றினார். ஆர்.கே.ஜி.பவுண்டேஷன் தலைவர் கே.நிர்மலா வரவேற்றார். உஷா நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.