சிதம்பரம் குட்டையில் இறந்து கிடந்த ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்!
ஜார்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டம், போட்டோகோடியா கிராமத்தைச் சேர்ந்த கிரிஜன் முர்முர் (44) என்பவர் சிதம்பரம் அருகே கரிக்குப்பத்தில் உள்ள தனியார் அனல் மின்நிலையத்தில் வேலைபார்த்துள்ளார். பின்னர்
சிதம்பரம் அருகே அனல் மின்நிலையித்தில் பணியாற்றி ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் அங்குள்ள பக்கிங்காம் கால்வாயில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
ஜார்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டம், போட்டோகோடியா கிராமத்தைச் சேர்ந்த கிரிஜன் முர்முர் (44) என்பவர் சிதம்பரம் அருகே கரிக்குப்பத்தில் உள்ள தனியார் அனல் மின்நிலையத்தில் வேலைபார்த்துள்ளார். பின்னர் அவர் வேலையை விட்டு நிறுத்தப்பட்டதால் சொந்த ஊருக்கும் சென்று திரும்பி வந்து வேலை கேட்டுள்ளார். வேலை வழங்கப்படாததால், சுற்றி திரிந்து வந்த கிரிஜன் முர்முர் மின்நிலையத்திற்கு செல்லும் வழியில் குட்டியாண்டவர் கோயில் அருகே உள்ள பக்கங்காம் கால்வாய் குட்டையில் மர்மமான முறையில் திங்கள்கிழமை காலை இறந்து கிடந்தார்.
இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் ரங்கநாதன் கொடுத்த புகாரின் பேரில் பரங்கிப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.