முகப்பு
தற்போதைய செய்திகள்

எபோலா: தேனி மாவட்ட இளைஞர்  கண்காணிப்பிலிருந்து விடுவிப்பு

ஒரு மாத கால தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த அவருக்கு எந்த பிரச்னையும் இல்லை என்றும், அவர் நலமுடன் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.எபோலா வைரஸ் தாக்குதலுக்குட்பட்ட கினியா

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:43 AM
பகிர்:

எபோலா தாக்குதலுக்குட்பட்ட மேற்கு ஆப்பிரிக்க நாட்டில் இருந்து தமிழகத்திற்கு பயணித்த தேனி இளைஞர் தமிழக சுகாதாரத் துறையின் கண்காணிப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

ஒரு மாத கால தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த அவருக்கு எந்த பிரச்னையும் இல்லை என்றும், அவர் நலமுடன் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.எபோலா வைரஸ் தாக்குதலுக்குட்பட்ட கினியா நாட்டிலிருந்து ஒரு இளைஞர்  இரவு கடந்த மாதம் 9-ஆம் தேதி இரவு சென்னை வந்தார். தேனி மாவட்டம் கொடுவாளைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவரான பார்த்திபன்(25) ஓராண்டாக மேற்கு ஆப்பிரிக்காவைச் சேர்ந்த கினியா நாட்டில் பணிபுரிந்து வருகிறார். தந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவரைப் பார்ப்பதற்கு துபாய் வழியா இந்தியா வந்தடைந்தார்.

எபோலா தாக்குதலுக்குட்பட்டிருந்த கினியா நாட்டிலிருந்து அவர் வந்திருந்ததால் அவர் மீது கூடுதல் கவனம் செலுத்தி பரிசோதனைகள் மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டது. சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட பார்த்திபனுக்கு, பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. எபோலா பாதிப்பிற்கான அறிகுறிகள் ஏதும் இல்லாததால் அவர் உடனடியாக சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டார். எனினும் தொடர்ந்து அவர் கண்காணிக்கப் பட்டு வந்தார். இது குறித்து பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

Advertisement

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து பயணித்த அனைத்து பயணிகளையும் 30 நாள்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இதுவரை 259-க்கும் மேற்பட்டோர் கண்காணிப்புப் பட்டியலில் இருந்து வருகின்றனர். இதுவரையில் யாருக்கு எபோலா பாதிப்பிற்கான அறிகுறிகள் ஏற்படவில்லை. இந்நிலையில் தேனியைச் சேர்ந்த பார்த்திபன் என்பவருக்கு கடந்த 30 நாள்களாக எந்தவித அறிகுறிகளும் ஏற்படவில்லை. அவர் நலமாக உள்ளதால், எபோலா பாதிப்புக்கான கண்காணிப்பில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். பார்த்திபனையும் சேர்ந்து இதுவரை இரண்டு பேர் கண்காணிப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர் என்று அவர்கள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments