முகப்பு
தற்போதைய செய்திகள்

சட்டப்பேரவையை முற்றுகையிட முயன்ற 150 ஆட்டோ தொழிலாளர்கள் கைது

அமைப்புசாரார நலச்சங்கத்தை நலவரியமாக மாற்ற வேண்டும். சட்டவிரோதமாக இயங்கும் இரண்டு சக்கர மோட்டார் வாடகை நிலையங்களை தடை செய்ய வேண்டும். தீபாவளி உதவித்தொகை ரு.2000 ஆயிரம்

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:43 AM
பகிர்:

14 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி சட்டப்பேரவை முற்றுகையிட முயன்ற சிஐடியு ஆட்டோ தொழிலாளர்கள் 150 பேரை போலீஸார் கைது செய்தனர்.

அமைப்புசாரார நலச்சங்கத்தை நலவரியமாக மாற்ற வேண்டும். சட்டவிரோதமாக இயங்கும் இரண்டு சக்கர மோட்டார் வாடகை நிலையங்களை தடை செய்ய வேண்டும். தீபாவளி உதவித்தொகை ரு.2000 ஆயிரம் அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டும். அறுபது வயது பூர்த்தி அடைந்த தொழிலாளர்களுக்கு அனைத்து நலத்திட்ட உதவிகளையும் வழங்க வேண்டும். ஆட்டோ தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் ஏற்படுத்த வேண்டும். போக்குவரத்துதுறையில் வசூலிக்கும் சாலை வரியில் முன்று விழுக்காடு வரியை வாரியத்தில் சேர்க்க வேண்டும், போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த வேண்டும்.மருத்துவக் காப்பீடு திட்டத்தை பயன்பெறும் வகையில் தமிழகம் போல் நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு  கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி தலைமை தபால் நிலையம் எதிரில் நடைபெற்ற போராட்டத்திற்கு சிஐடியூ ஆட்டோ சங்க பிரதேச  தலைவர் ஆர்.ராஜாங்கம் தலைமை தாங்கினார். ஆட்டோ சங்க கவுரவத்தலைவர் தா.முருகன், சிஐடியூ பிரதேச செயலாளர் வே.கு.நிலவழகன், ஆட்டோ சங்க பொதுச்செயலாளர் சீனிவாசன், நிர்வாகிகள் மது, சேகர் மதிவாணன், மணவாளன், வடிவேலு, ரமேஷ், பழனிபாலன், நுர்முகமது உள்ளிட்ட திரளான ஆட்டோ தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

முன்னதாக காமராஜ் சிலையில் இருந்து ஊர்வளமாக வந்த ஆட்டோ தொழிலாளர்கள்  காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.