பட்ஜெட் நிதி முறையாக செலவிடப்படுகிறதா என காங்கிரஸ் கண்காணிக்கும்: வி.நாராயணசாமி
ஆளும் என்.ஆர். காங்கிரஸ் அரசின் மக்கள் விரோதப் போக்கை கண்டித்து முதலியார்பேட்டையில் காங்கிரஸ் கட்சி சார்பில் வியாழக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மாநில தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன்
புதுச்சேரி அரசால் பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் நிதி முறையாக செலவிடப்படுகிறதா என காங்கிரஸ் கட்சி கண்காணிக்கும் என முன்னாள் மத்திய அமைச்சர் வி.நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
ஆளும் என்.ஆர். காங்கிரஸ் அரசின் மக்கள் விரோதப் போக்கை கண்டித்து முதலியார்பேட்டையில் காங்கிரஸ் கட்சி சார்பில் வியாழக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மாநில தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய அமைச்சர் வி.நாராயணசாமி கண்டன உரையாற்றினார்.அப்போது அவர் பேசியதாவது:
முந்தைய பட்ஜெட்டில் அறிவிக்கப்படட திட்டங்களையே இதுவரை அரசு நிறைவேற்றவில்லை. தற்போது தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டிலும் ஒன்றும் இல்லை. கடந்த 2013-ம் ஆண்டி பட்ஜெட் தொகை ரூ.2000 கோடியில் வெறும் ரூ.1665 கோடியை மட்டுமே அரசால் செல்வு செய்ய முடிந்தது. ஆனால் நடப்பாண்டு ரூ.2400 கோடி திட்டச் செலவுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.பட்ஜெட் தொகை முறையாக செலவு செய்யப்படுகிறதா என காங்கிரஸ் கட்சி கண்காணிக்கும்.
பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படும் இலவச ஒற்றை அவியல் அரிசி கொள்முதலில் முறைகேடுகள் நடந்துள்ளன. இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். ஏஎப்டி பஞ்சாலையை புனரமைக்க மத்திய அரசு ரூ.300 கோடி ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி வரும் 26-ம் தேதி புதுவை வரும் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் காங்கிரஸ் கட்சி மனு அளிக்கும்.
அதிகரிக்கும் சாராயக்கடைகள்
புதுச்சேரியில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளா செய்வதை விட, அதிகம் சாராய, மதுக்கடைகளை திறக்கின்றனர். கிராமப்புறங்களில் மக்களை பாதிக்கும் வகையில் பள்ளி, வழிப்பாட்டுத்தலங்கள், குடியிருப்பு பகுதியிலுயே சாராயக்கடைகளை திறக்கின்றனர். இக்கடைகளை மாற்றக்கோரினால் அதற்கும் பணம் கேட்கின்றனர்.
மத்தியில் காங்கிரஸ் அரசால் தான் புதுவையில் அரும்பார்த்தபுரம் ரயில்வே மேம்பாலம், 100 அடி சாலை ரயில்வே மேம்பாலம், ராஜிவ்காந்தி, இந்திரா காந்தி சதுக்க மேம்பாலங்களுக்கு அனுமதிக்கப்பட்டு நிதி தரப்பட்டது. பிரதமர் மோடியின் உற்ற சகோதரர் எனக்கூறி வரும் முதல்வர் ரங்கசாமி புதுவையின் நலனுக்காக எவ்வளவு நிதியை பெறுகிறார் என பார்க்கலாம் என்றார் நாராயணசாமி.
ஐ.என்.டியுசி தலைவர் ரவிச்சந்திரன் உள்பட முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.