தண்டவாளத்தில் கட்டுமான கம்பி: கோவை எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்கும் சதியா என்ற கோணத்தில் விசாரணை
திருப்பரங்குன்றம், பசுமலை அருகே ரயில் தண்டவாளத்தில் ஒரு கம்பி கடந்துள்ளது. இன்று காலை அந்த வழியாக வந்த கோவை எக்ஸ்பிரஸ் ரயில் ஓட்டுநர் அந்த கம்பியை பார்த்ததும் ரயிலை நிறுத்தி ரயில்வே போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

சம்பவ இடத்துகு விரைந்து வந்த ரயில்வே போலீஸார் ரயிலை கவிழ்க்கும் சதி திட்டம் ஏதும் நடந்துள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் அருகில் கட்டுமான பணி நடக்கும் ஒரு கட்டடத்தில் இந்த வழியாக யாரோ கம்பியை எடுத்துச் சென்று இருக்க கூடும் அப்போது அந்த கம்பியில் ஒன்று தவறி விழுந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
எனினும் இந்த சம்பவத்தால் ரயில் போக்குவரத்தில் சிறிது பாதிப்பு ஏற்பட்டது.